சிறுநீரகம் தானம் செய்த பாலஸ்தீனருக்கு கனடிய அகதி அந்தஸ்து மறுக்கப்படும் அபாயம்?

ஒட்டாவா — முகமது அல் ஹிந்தி (Mohammed Al Hindi) என்ற பாலஸ்தீன அகதி விண்ணப்பதாரரின் கோரிக்கை, கனடா அரசின் புதிய எல்லைச் சட்டமான C-12 காரணமாக இப்போது ஆபத்தில் உள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் போரிலிருந்து தப்பிக்கத் தனது குடும்பத்துடன் காசா பகுதியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு, 2023 கோடையில் சுமார் ஏழு வாரங்கள் அவர் கனடாவுக்கு வந்திருந்தார். கனேடியக் குடிமகளாக இருக்கும் தனது சகோதரிக்கு ஒரு சிறுநீரகத்தை தானம் செய்வதே அவரது அப்போதைய வருகையின் நோக்கமாக இருந்தது. கனடாவின் […]

ஹோர்முஸ்நீரிணைக்குள் கப்பல்கள் நுழைவதையும் அங்கிருந்து வெளியேறுவதையும் அமெரிக்க கடற்படை தடுக்கும்- ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ்நீரிணைக்குள் (Strait of Hormuz) நுழைய அல்லது அங்கிருந்து வெளியேற முயற்சிக்கும் “எல்லா கப்பல்களையும் முற்றுகையிடும் நடவடிக்கையை அமெரிக்கா ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பேச்சுவார்த்தைகள் நன்றாகவே நடந்தன, பெரும்பாலான விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், உண்மையில் முக்கியமான ஒரே விடயமான ‘அணு ஆயுதம்’ (NUCLEAR) என்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். தடையற்ற போக்குவரத்து குறித்த உடன்பாடு ஒரு கட்டத்தில் எட்டப்படும் […]

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்குமாறு அரசுக்கு சஜித் வலியுறுத்தல்

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருள், எரிவாயு (Gas), மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் உரங்களின் விலைகளைக் குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் உள்ள யோடகண்டிய போதி மஹா விகாரை, நாக மஹா விகாரை மற்றும் ) மகுல் மஹா விகாரை ஆகிய இடங்களுக்கு நேற்று (12) விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர், அங்குள்ள பிக்குகளின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். அதிகரித்து வரும் […]

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும்

டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடந்தால், அமெரிக்காவுடனான உடன்பாடு எட்ட முடியாத ஒன்று அல்லவென ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்க – ஈரானிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியானுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையே தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த உரையாடல் தொடர்பான அறிக்கையை ஈரான் அரச ஊடகம் பகிர்ந்துள்ளது. அந்த உரையாடலின் போதே. ஈரான் ஜனாதிபதி […]

நியூசிலாந்தில் புயல் – 90 விமானங்கள் வரை ரத்து

நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை பெய்தது. இதனால் வார்க்வோர்த் நகரில் உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகள், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வடக்குத் தீவின் வக்காட்டேன் பகுதியில் 270 வீடுகளில் இருந்த 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 5,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாகப் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. […]

சில மாவட்டங்களில் மழை!

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று (13) காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம். இடியுடன் […]

மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் மீது ஊழல் குற்றச்சாட்டு

மன்னார் நகர சபை தவிசாளர் டானியல் வசந்தன் , முன்னாள் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் (CID) சாட்சியமளித்துள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அழைப்பிற்கு அமைய  தவிசாளர் சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு சாட்சியமளிக்க எனக்கு இன்றைய தினம் அழைப்பு […]

கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக ஹேஷா விதானகே நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் 2026 நடப்பாண்டிற்கான தலைவராக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதி வழங்கி வைத்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய பெண்கள் சக்தியின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹிணி குமாரி கவிரத்ன விஜேயரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் பிரச்சனமாகி இருந்தார்.