கொக்கட்டிச்சோலை கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன், மற்றுமொரு பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று (10) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கடத்தல், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு […]
தனியார் பல்கலை மாணவனின் மரணத்திற்கு மாரடைப்பே காரணம்
ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற விருந்து ஒன்றின் போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார். தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இந்த விருந்தினை நடத்தியிருந்ததுடன், அங்க ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியிருந்தது. இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் […]
விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
புதுவருட காலப்பகுதியினுள் மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முப்படையினர், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் முன்னெடுப்பில் இந்த விசேட பாதுகாப்பு பொறிமுறை செயற்படுத்தப்படுகிறது. இந்த கூட்டு வேலைத்திட்டத்தின் மூலம், புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் நடைபெறவுள்ள பல்வேறு விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் […]
சிஐடி ரணிலுக்கு உள்நாட்டில் சிகிச்சையளித்த மருத்துவர்களை இலக்கு வைக்கிறது – ஐக்கிய தேசிய கட்சி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குச் சிகிச்சை அளித்த உள்நாட்டு மருத்துவர்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இலக்கு வைத்து விசாரணை நடத்தி வருவதால் மேலதிக சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எனஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது குறித்து மேலும் கூறியதாவது: மருத்துவர்கள் மீதான நெருக்குதல்: ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களைக் குறிவைத்து சிஐடி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாகவே அவரை […]
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி!
எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் கடமைகளைப் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் நுவான் துஷார

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்பதற்கான தடையற்ற சான்றிதழை (NOC) வழங்க இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மறுத்ததற்கு எதிராகத் தான் மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபையிடம் மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வாவிற்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், கிரிக்கெட் சபையை நீதிமன்றத்திற்கு […]