ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற விருந்து ஒன்றின் போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார்.
தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் இந்த விருந்தினை நடத்தியிருந்ததுடன், அங்க ஏற்பட்ட தர்க்கம் மோதலாக மாறியிருந்தது.
இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.