வறட்சி; நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வீழ்ச்சி!

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் இன்று புதன்கிழமை (08) 12 மணிநேர நீர் விநியோகக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கலகெதர, இரிதா பொல, பின்னவல, வேவெல்பனாவ, பிடூம்பே, மீபே, மாவத்தகம, […]
அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் ஏலம்

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள், நேற்று (07) யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாகத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இந்திய மற்றும் உள்நாட்டுப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு உபகரணங்கள் இதன்போது விற்பனைக்கு வைக்கப்பட்டன. விற்பனை செய்யப்பட்ட பொருட்கள்: இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட […]
சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சீன சிகரெட்டுகளுடன் 5 வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ரூபா 52 இலட்சத்து 20 ஆயிரம் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன், சீன நாட்டவர்கள் ஐவர் இன்று (08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு வயதுடைய சீன நாட்டு வர்த்தகர்கள் ஆவர். இவர்கள் இன்று அதிகாலை 01:10 மணியளவில் சீனாவின் குன்மிங் (Kunming) நகரில் இருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ (China Eastern) விமான சேவைக்குச் சொந்தமான MU-713 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க […]
அனலைதீவில் ஆயுதங்கள் மீட்பு

அனலைதீவு பகுதியில் துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் இன்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து தெரியவருவதாவது அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை அதன் உரிமையாளர் இன்று துப்பரவு செய்துள்ளார். இதன்போது, மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு மற்றும் துப்பாக்கியை அவர் அவதானித்துள்ளார். இது குறித்து உடனடியாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர். மீட்கப்பட்ட வெடிபொருட்களை நீதிமன்ற அனுமதியுடன் செயலிழக்கச் செய்வதற்கும், […]
மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), குவஹாத்தியில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது. மழை காரணமாக தலா 11 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே இப்போட்டி நடைபெற்றிருந்தது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: மும்பை ராஜஸ்தான்: 150/3 (11 ஓவ. ) (துடுப்பாட்டம்: யஷஸ்வி ஜைஸ்வால் ஆ.இ 77 (32), வைபவ் சூரியவன்ஷி 39 (14), ரியான் பராக் 20 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: அல்லா மொஹமட் கஸன்ஃபார் 2/21 [2], ஹர்திக் […]
மரதன்கடவலையில் மலசலகூடக் குழிக்குள் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

அனுராதபுரம் – மரதன்கடவலை பகுதியில் கட்டுமானப் பணியில் இருந்த வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன், நீர் நிறைந்திருந்த மலசலகூடக் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது : கொல்லன்குட்டிகம பகுதியைச் சேர்ந்த அகார் மொஹமட் என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் தனது 9 மற்றும் 13 வயதுடைய சகோதரர்களுடன் இணைந்து, அப்பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றுக்கு அருகில் புறாக்களைப் பிடிப்பதற்காகச் சென்றுள்ளார். […]
தமிழகச் சட்டமன்றத் தேர்தல்; 164 சொத்து விவரப் பட்டியலுடன் பெண் வேட்பாளர்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ், தற்போது தமிழகத்தின் மிகவும் பணக்கார பெண் வேட்பாளராக உருவெடுத்துள்ளார். மார்ட்டின் குழுமத்தின் இயக்குநராக இருக்கும் 58 வயதான இவர், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரப் பட்டியல் மட்டும் 164 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களின் அடிப்படையில், கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சமூகப் பணி மற்றும் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், பெரும் […]
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவே!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்குவதே கட்சியின் இறுதி இலக்கு என அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியான மாற்றங்கள் மற்றும் நவீன உலகிற்கு ஏற்றவாறு நாட்டை வழிநடத்தக்கூடிய தகுதி நாமல் ராஜபக் ஷவிடமே உள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் நாட்டின் […]
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்தமையே இலங்கையின் நெருக்கடிகளுக்குக் காரணம்!
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சவுதி அரம்கோ விலை சுட்டெண்ணுக்கு அமைய, உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தில் எவ்வித தடையுமில்லை எனக் கூறிய அமைச்சர், புதிய ஒப்பந்தத்தின் கீழ் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார். நாட்டில் எரிவாயுவைச் […]
நுவரெலியா பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல்

தேசிய அரச பேரவையின் அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை மீறி, அரசாங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் கட்டிட நிர்மாண வரைபடத்திற்கு அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில், நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் செவ்வாய்க்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர், கடந்த 2021-ஆம் ஆண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், விண்ணப்பதாரருக்கு சாதகமான முறையில் குறித்த வரைபடத்திற்கு அனுமதி வழங்கியதன் மூலம் […]