திருமதி மயூரி சுதாகர்

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலையை வசிப்பிடமாகவும், கனடா Newcastle வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மயூரி சுதாகர் அவர்கள் 04-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், மனோகரன், அகிலாண்டேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சிவராசா மற்றும் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும், சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும், அஷ்வின், ஆகாஷ், அஷ்மிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும், புஸ்பரோசா பாலசந்திரன் அவர்களின் அன்புச் சகோதரியும், சியாமளா பத்மநாதன்(ஜேர்மனி), சாந்தினி சிறிதரன்(ஜேர்மனி), ரவீந்திரன் முகுந்தினி(கனடா) ஆகியோரின் மைத்துனியும், […]
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி?

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனைத் தாக்க முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வன வள திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோத மணல் அகழ்வு காடழிப்பு செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இவை அதிகாரிகள் இலட்சம் பெற்றுக்கொண்டு செய்வதாக […]
வட்டுக்கோட்டை 50 – வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் தேதி தந்தை செல்வா அரங்கில் பிற்பகல் 1 மணிக்கு ஒரு நினைவு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. 1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்தது. ஐம்பது ஆண்டுகள் கடந்தபின்னரும், அதன் அடிப்படை கோரிக்கைகளும் கொள்கைகளுமே தமிழின விடுதலை பாதையின் அடிநாதமாகவும், […]
யாழில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு வழங்க அனுமதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில், பலரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு காணிகளை வழங்குவதற்கான முதற்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அரச காணிச் சட்டத்தின் கீழ் நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விரிவாக ஆராயப்பட்டன. இதில் தகுதியுடைய சில விண்ணப்பங்களுக்கு உடனடியாக […]
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சஜித் கோரிக்கை!

அரசாங்கம் 38 நாட்கள் செயலற்று இருந்துவிட்டு, தற்போதுதான் விழித்துக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தொடர்ச்சியான போராட்டங்களே அரசாங்கத்தை இந்த நிவாரணப் பொதியை அறிவிக்கத் தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உரைக்கு பதிலளித்துப் பேசிய பிரேமதாச, பொருளாதார நெருக்கடி மற்றும் கஷ்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சிகள் பல வாரங்களாக வலியுறுத்தி வந்ததைச் சுட்டிக்காட்டினார். இதுவரை அமைதியாக இருந்த அரசாங்கம், திடீரென […]
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் கையளிப்பு!

மிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி320க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள், வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இயக்கங்களால் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டது. இது குறித்து மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளதாவது 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள எஞ்சிய 10 தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு அதில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர், மற்றுமொரு இருவர் […]
தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு வலியுறுத்திய ரவிகரன் எம்.பிக்கு ஜனாதிபதி பதில்!

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பில், கூடிய விரைவில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, குறித்த கலந்துரையாடலின் பின்னர் கேப்பாப்புலவு காணி விடுவிப்பு தொடர்பான முடிவு தம்மால் அறிவிக்கப்படும் எனவும் பதிலளித்துள்ளார். பாராளுமன்ற குழு அறையில் நேற்று செவ்வாய்க்கிழமை […]
ஒன்ராறியோ மாகாண பாடசாலையில் தீ விபத்து

ஒன்ராறியோவின் நோர்போக் கவுண்டி (Norfolk County) பகுதியில் உள்ள உயர்தர பாடசாலை ஒன்றில், நபர் ஒருவர் தீப்பற்றிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோர்போக் கவுண்டியில் உள்ள ‘சிம்கோ கலப்புப் பாடசாலை’ (Simcoe Composite School) வளாகத்தில் நபர் ஒருவர் தீப்பற்றி எரிவதாக மாகாணப் பொலிஸாருக்கு (OPP) அவசரத் தகவல் வழங்கப்பட்டது. மீட்பு நடவடிக்கை: சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், தீக்காயங்களுக்கு உள்ளான ஒருவரை மீட்டனர். அவர் உடனடியாக உலங்குவானூர்தி (Ornge air […]
இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யாத நிறுவனத்திற்கு கேள்வி கோரல்?

இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றுக்கே அரசாங்கம் நிலக்கரி கொள்வனவுக்கான கேள்விக்கோரலை வழங்கி இருக்கிறது. அதேநேரம் நிலக்கரி தரம் குறித்து பரிசோதிப்பதற்கு அங்கீகாரம் இல்லாத நிறுவனமே இதுவரை காலமும் நிலக்கரி தரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது என கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற சமூக பாதுகாப்பு உதவுதொகை அறவீடு (திருத்தச்) சட்டமூலம்,விளையாட்டில் ஊக்கப்பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் […]
“ஈரான் மீதான தாக்குதல் உலகப் பொருளாதாரத்தைச் சிதைக்கும்” – டொனால்ட் டிரம்பிற்கு மார்க் கார்னி எச்சரிக்கை!

“மிகக் கடுமையான இராணுவத் தாக்குதல்” நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்திருந்த மிரட்டல் குறித்து, கனடிய அரசாங்கத்தின் விசேட பொருளாதார ஆலோசகர் மார்க் கார்னி தனது கவலையை வெளியிட்டுள்ளார். ஈரானுடன் ஒரு நேரடிப் போர் ஏற்பட்டால், அது உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியை (Supply Chain) முற்றாக முடக்கும் என மார்க் கார்னி எச்சரித்துள்ளார். குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் எண்ணெய் விலைகள் கட்டுக்கடங்காமல் உயரும் என அவர் சுட்டிக்காட்டினார். “இந்தத் தருணத்தில் இராஜதந்திர […]