கொண்டாட்ட கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

கொண்டாட்ட கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் தலைவர் அகில ஜயரத்ன இதனை அறிவித்துள்ளார். அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம், பண்டிகைக் கால உணவு முன்பதிவுகளுக்கான கட்டணத்தை இன்று (08) முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது. மே மாதம் முதல் மேற்கொள்ளப்படும் […]

பூநகர் கிராமத்தில் ஆயுதங்கள் மீட்பு!

திருகோணமலை- பூநகர் கிராமத்தில் உள்ள மரமொன்றின் கீழ் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மீட்பு நடவடிக்கையானது இன்றையதினம் (08.04.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது துப்பாக்கி ரவைகள் 694, 61 ரக மோட்டார் குண்டுகள் -04, மோட்டார் பியுஸ் -02, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -06 ,ஆர்.பி.ஜி.குண்டு -01 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்களை விசேட அதிரடிப்படையின் உதவியுன் செயலிழக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளை […]

மனிதப் புதைகுழிகளை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடரும்! – காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் மூன்று நாட்களாக அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு மனித எச்சங்களோ அல்லது வேறு தடயங்களோ கண்டறியப்படாமையினால் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதி மீண்டும் மூடப்பட்டதாகவும், குறித்த பகுதியில் மனிதப்புதைகுழிகள் இருக்கக்கூடிய ஏனைய சாத்தியமான இடங்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது. இதகுறித்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழியொன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி நீதிவான் […]

வட மாகாணத் தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய விசேட குழு

வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், வணிக மேம்பாட்டை உறுதி செய்யவும் மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாண வணிகக் கொள்கை: மாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான வணிகக் கொள்கை ஒன்றை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (SME): இத்துறை சார்ந்த தொழில்முயற்சியாளர்கள் சந்திக்கும் நிதிச் சிக்கல்கள் மற்றும் வங்கி நடைமுறைத் தடைகளை நீக்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. தரவு சேகரிப்பு: மாகாணத்தின் வளங்கள் […]

கடத்தப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை

அண்மையில் ஈராக் தலைநகரான பாக்தாத்தில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட அமெரிக்க பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த மார்ச் 31ஆம் திகதி பாக்தாத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ‘கதாயிப் ஹிஸ்புல்லாவினரால் இவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பெண் ஊடகவியலாளர் விடுவிக்கப்படுவார் என அக்குழு அறிவித்ததோடு, அவர் விடுவிக்கப்பட்டதும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்திருந்தது. இந்நிலையில் குறித்த குழுவினரால் விடுவிக்கப்பட்டுள்ள […]

‘வரலாற்று வெற்றி’ என ஈரான் அறிவிப்பு

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்திற்காக ஹோர்மூஸ் நீரிணையை திறக்க ஈரான் மீது காலக்கெடு விதித்திருந்தார். இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவில், “இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழியக்கூடும். அது மீண்டும் திரும்ப முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால் அதற்கான சாத்தியம் உள்ளது” என கடுமையான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்று அதிகாலை 5.30 […]

புதுச்சேரி, கேரளா, அசாம் தேர்தல் பிரச்சாரம் நிறைவு!

வட இந்திய மாநிலமான அசாம் – தென்னிந்திய மாநிலமான கேரளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெறும் பொது தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நேற்றுடன் (7)நிறைவடைந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை (9)வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வட இந்திய மாநிலமான அசாம் மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடியான போட்டி ஏற்பட்டிருக்கிறது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக 89 […]

தனது சம்பளப் பட்டியலை பகிரங்கப்படுத்தினார் எம்.பி அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் வருமானம் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் எனக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது 2026 மார்ச் மாதத்திற்கான சம்பளப் பட்டியலை (Salary Slip) பகிரங்கமாகப் பகிர்ந்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பகிர்ந்த ஆவணத்தின்படி, அவரது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் விபரங்கள் வருமாறு: சம்பள விபரம்: மொத்த வருமானம் (Gross Salary & Allowances): ரூபா 415,169.93 மொத்தக் கழிவுகள் (Deductions): ரூபா 19,308.71 நிகரச் சம்பளம் (Net Salary): ரூபா 395,861.22 […]

ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம்

கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கெசல்கமுவ ஆற்றில் ஒரு பெண் சடலம் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுளது என நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். நோர்வூட் – பொககவந்தலாவா மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோர்வூட் பாலத்திற்குக் கீழே ஆற்றில் சடலமாக மிதப்பதாக பொலிஸாருக்கு பிரதேசவாசிகளினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது எனினும் சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், ஹட்டன் […]

பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் போன்று ஆள்மாறாட்டம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக பாரிய அளவிலான மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, WhatsApp (வட்ஸ்அப்) அல்லது நேரடித் தொலைபேசி அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதை இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இவ்வாறு தொடர்புகொண்டு உரையாடும் மோசடிக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் சில மொபைல் செயலிகளை (Mobile Apps) பதிவிறக்கம் செய்யுமாறு கூறுவதும் கைபேசித் […]