உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்தமையே இலங்கையின் நெருக்கடிகளுக்குக் காரணம்!

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சவுதி அரம்கோ விலை சுட்டெண்ணுக்கு அமைய, உலக சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தில் எவ்வித தடையுமில்லை எனக் கூறிய அமைச்சர், புதிய ஒப்பந்தத்தின் கீழ் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.

நாட்டில் எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், மாலைதீவில் உள்ள நிறுவனமொன்றின் வசதிகளே பயன்படுத்தப்படுவதாகவும், மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு எரிவாயு கொண்டு வரப்படுவதால் ஏற்படும் மேலதிக செலவுகளும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:

“பொதுவாக எல்.பி.ஜி எரிவாயு விலை சுட்டெண்ணில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சவுதி அரம்கோ சுட்டெண்ணின்படி ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 541.5 டொலராக இருந்தது. அது மார்ச் மாதத்தில் 787.50 டொலராக உயர்ந்துள்ளது. இது லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில் தற்போதைய உயர்வை விட அதிக விலையேற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை.

கடந்த காலங்களில் எமக்கு இருந்த பிரதான பிரச்சினை எரிபொருள் மற்றும் எரிவாயுவைச் சேமிப்பதற்கான வசதிகள் போதாமையாக இருந்தமையாகும். புதிய ஒப்பந்தத்தின்படி நாம் ‘ஜியோ கேஸ்’ நிறுவனத்திற்கு மாறியுள்ளோம். இதற்கு முன்னர் ஓமான் நிறுவனத்திடமே ஒப்பந்தம் இருந்தது. ஜியோ கேஸ் நிறுவனம் ஊடாக தற்போது மத்திய கிழக்கிலிருந்து அல்லாமல், அமெரிக்காவிலிருந்து 80 சதவீதமும், தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 சதவீதமுமே எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்த வழித்தடங்களில் பாரிய தடைகள் இல்லாததால் விநியோகத்தில் சிக்கல் இல்லை.

இலங்கையில் தற்போது பாரிய அளவில் எரிவாயுவைச் சேமிக்க இடமில்லை. எனவே, கப்பல் வந்து மாலைதீவு நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியத்தில் எரிவாயுவைச் சேமித்துவிட்டு, அங்கிருந்து சுமார் 3,900 மெட்ரிக் தொன் எரிவாயு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதற்கென மேலதிக செலவு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் கப்பலிலிருந்து எரிவாயுவைச் சேமிக்க எமக்கு வசதி இருந்தால் இந்தச் செலவைக் குறைத்திருக்கலாம். எனவே, எரிவாயுவை நிரந்தரமாகச் சேமிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான திட்டங்களை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.”

net

நெத்தலியாறு விவசாயிகள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

April 18, 2026

தமது சொந்தக் காணிகளிலேயே சிறுபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத்தருமாறு கல்மடுக்குளத்தின் சிறுபோக நீர்ப்பாசன பங்காளர்களான விசுவமடு மேற்கு கமக்கார

ds

வடக்கு, கிழக்கு சிகையலங்கார நிலைய சம்மேளனங்களை இணைப்பது குறித்து ஆய்வு

April 18, 2026

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் உள்ள அழகக சம்மேளனங்களை இணைத்து ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்

ind

இலங்கை விஜயத்தின் போது இந்திய துணை குடியரசு தலைவர் இந்திய வம்சாவளி தமிழர்களை நோக்கி நேசக்கரம் நீட்டுவார்- இந்திய தூதுவர்

April 18, 2026

பரந்த அளவிலான இராஜதந்திர மற்றும் மக்கள் நலன் சார்ந்த பயணமாக, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்

chaco

நிலக்கரி முறைகேடு; அடுத்த வாரம் விசாரணை ஆரம்பம்

April 18, 2026

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்

cana gu

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற துப்பாக்கிச் சூடு: ஆறாம் ஆண்டு நினைவேந்தல்!

April 18, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா கிராமப்புற பகுதியில், பொலிஸ் அதிகாரி வேடமணிந்த நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இளைஞர்

her

லெபனானில் பிரெஞ்சு அமைதிப்படை சிப்பாய் பலி: ஹிஸ்புல்லா மீது மக்ரோன் குற்றச்சாட்டு

April 18, 2026

தெற்கு லெபனானில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில், சர்வதேச அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர்

sea

பொலிஸாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த நபர் உயிரிழப்பு

April 18, 2026

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடலில் குதித்த நிலையில், நீரில்

Parl

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்?

April 18, 2026

நிலக்கரி கொள்முதல் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குமார ஜெயக்கொடி பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த வெற்றிடத்திற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான

lan

லங்லியில் அடுத்தடுத்த நாட்களில் கத்திக்குத்து: இரு இளைஞர்கள் காயம்

April 18, 2026

லங்லி பகுதியில் இரண்டு நாட்களில் இரண்டு வெவ்வேறு கத்திக்குத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனினும், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்தத்

colo

மாணவர்களை இலக்கு வைக்கும் ‘கொலைப்பட்டியல்’: பதற்றத்தில் பிரிட்டிஷ் கொலம்பியா சமூகம்

April 18, 2026

பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறிய நகரம் ஒன்றில் 16 மாணவர்களைக் குறிவைத்து “கொலைப்பட்டியல்” என்று அழைக்கப்படும் பட்டியல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து,

hur

ஹோமுஸ் நீரிணையில் கப்பல் மீது ஈரான் தாக்குதல்

April 18, 2026

மான் கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் (30 கி.மீ) தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றைத்

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்