தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பல பகுதிகளில் இன்று புதன்கிழமை (08) 12 மணிநேர நீர் விநியோகக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கலகெதர, இரிதா பொல, பின்னவல, வேவெல்பனாவ, பிடூம்பே, மீபே, மாவத்தகம, பாதுக்க, உடுமுல்ல, அருக்வத்த, வேரகல, போபே, மலகல, கஹவல, மில்லவ, கொட்டியாங்கொட, போரேகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மன, மீரியகல்ல மற்றும் யடவத்துர ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெலன்வத்த, சித்தமுல்ல, எரவ்வல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, மொரகெட்டிய வீதி, ஹிரிபிட்டிய, கொரகபிட்டிய வீதி, நியந்தகல வீதி, தோலேகடே சந்தி, குடாமாதுவ மற்றும் புபுது மாவத்தை 255 பஸ் வீதி ஆகிய பகுதிகளில் ஏற்கனவே நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.