ஜனாதிபதியுடன் தேரர்கள் விசேட கலந்துரையாடல்

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இன்று(10.03.2026) கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஜனாதிபதியுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்ட மகாநாயக்க தேரர், நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் அரசின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்து கொண்டுள்ளார். புதிய அரசின் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் […]
கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலகத்திடமிருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று […]
மார்ச் 30; குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவித்துள்ளார். 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை (9) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக நீதவான் ரி.பிரதீபனால் எடுத்துக்கொள்ளப்பட்டது. […]
உப்பாறு பகுதியில் 18 டிங்கி படகுகளுடன் இருவர் கைது

திருகோணமலை, உப்பாறு பகுதியில் மகாவலி கங்கையை அண்டி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் இரு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கிழக்கு கடற்படை கட்டளையின் ‘கோகண்ண’ கடற்படை கப்பல் பிரிவினர், கடந்த வெள்ளிக்கிழமை (06) உப்பாறு பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 18 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். கைது […]
மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷிதவுக்கு அதி குற்றப்பத்திரிகை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார் வங்கி கணக்கொன்றில், 17 மில்லியன் ரூபாய் பணம் வைப்பிடப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை செவ்வாய்க்கிழமை (10) ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான யோஷித ராஜபக்சவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க உத்தரவிட்டார். மேலும், எதிர்வரும் […]
யாழ்.சரவணையில் ஆலயச் சிலை உடைப்பு

யாழ்ப்பாணம், சரவணை பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த உருவச்சிலை ஒன்று திங்கட்கிழமை (09) அன்று மர்ம நபர்களினால் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து ஆலய நிர்வாகத்தினரால் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த ஊர்காவற்துறை பொலிஸார், ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், குறித்த பகுதியைச் […]
ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸி.பொலிஸார் உதவி

ஈரான் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அடைக்கலமளிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களை அணி ஹொட்டலிலிருந்து அவுஸ்திரேலிய பொலிஸார் மீட்டெடுத்ததாக அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு அமைச்சர் டொனி புர்கே தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணப் போட்டியொன்றுக்கு முன்பாக தேசிய கீதத்தை பாட மறுத்த நிலையில் அணியை போர்க்கால துரோகிகளென உருவகப்பட்டதையடுத்து அணித்தலைவி உள்ளிட்ட ஐந்து வீராங்கனைகள் பாதுகாப்பைத் தேடியிருந்தனர். கோல்ட் கோஸ்ட் ஹொட்டலில் இன்னமும் உள்ள குழாமின் எஞ்சிய 21 உறுப்பினர்களுக்கான புகலிட வாய்ப்பு இன்னும் உள்ளதெனத் தெரிவித்த புர்கே, சிலர் ஈரானுக்குத் […]
கற்பிட்டியில் கடல் அட்டைகளுடன் ஏழு பேர் கைது

கற்பிட்டி, முகத்துவாரம் மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடல் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 1,146 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது 03 டிங்கி படகுகளுடன் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் ‘விஜய’ கப்பலுக்குச் சொந்தமான உச்சமுனை கடற்படைப் பிரிவினர், கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் நடத்திய சோதனையில் 418 கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு […]
மட்டக்களப்புச் சிறுவன் உலக சாதனை

உலகில் மிக வேகமாக எழுதக்கூடிய குழந்தை என்ற கௌரவத்தைப் பெற்று, மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் அப்டியல் ரயன் விக்டர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் டொனால்ட் விக்டர் மற்றும் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் தம்பதியினரின் மகனான இவர், தனது மூன்று வயதிலேயே தாயின் வழிகாட்டலில் வாசிக்கும் மற்றும் எழுதும் ஆற்றலை பெற்றுள்ளார். ரயனின் அசுர வேக எழுத்தாற்றலை கவனித்த அவரது பெற்றோர், இதனை உலக சாதனையாக பதிவு செய்ய […]
மோடி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்? – சுப்ரமணியன் சுவாமி

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சமரசங்களுக்கு’ உள்ளானதாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. தனது X பதிவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்: “மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்?” என அவர் வினவியுள்ளார். தனக்குத் தெரிந்த […]