நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பு!

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தான் சிங்கப்பூருக்கான பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளதால் அன்றைய தினம் சமூகமளிக்க முடியாது என கடந்த பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி அவர் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். வாக்குமூலம் வழங்குவதற்காக வேறொரு திகதியை ஒதுக்கித் […]

பாகிஸ்தானில் பாடசாலைகளுக்கு பூட்டு, வீட்டிலிருந்தே வேலை

ரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) நாடு தழுவிய ரீதியில் கடுமையான எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். திங்கட்கிழமை (09) அன்று பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கச் செலவினங்களைக் குறைத்து, முழுமையான எரிபொருள் முடக்கத்தை தவிர்ப்பதே இந்த அதிரடி மாற்றங்களின் பிரதான இலக்கு என அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக பிரதமர் […]

துப்பாக்கிச் சூடு; மற்றுமொரு சந்தேகநபர் கைது

கடந்த ஜனவரி 16ஆம் திகதி ஜிந்துப்பிட்டி பகுதியில் நபரொருவரை சுட்டுக்கொலை செய்து, இரண்டு சிறுவர்களைக் காயப்படுத்திய குற்றச்செயலுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த சந்தேகநபர் உடவலவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உடவலவ, கொழும்புஹேஆர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார். இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி கடந்த மார்ச் 03ஆம் திகதியும் […]

ஓட்டுமடம் பகுதி பள்ளிவாசலில் வாளேந்திய நபரால் பரபரப்பு

யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (09) இரவு தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வாளுடன் புகுந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஓட்டுமடம் சந்தியிலிருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இரவுத் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வாளேந்திய நபர் ஒருவர் இளைஞன் ஒருவனை துரத்திக் கொண்டு வந்துள்ளார். உயிருக்கு பயந்த இளைஞன் தப்பிச் செல்லும் நோக்கில் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்கிருந்த மதில் வழியாக ஏறி […]

யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரு வர் கைது!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று (09) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 630 போதை மாத்திரைகளும், 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சந்தேக நபர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. கைதான ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த […]

திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி

யாழ் புங்குடுதீவைப்பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Savigny – le-Temple ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கணேசலிங்கம் வரதலட்சுமி அவர்கள் 07.03.2026 சனிக்கிழமையன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான செல்லையா அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற செல்லையா கணேசலிங்கம் (குப்பிளான்) அவர்களின் அன்பு மனைவியும் தர்மசீலன் (Accountant), வசந்தினி(சுவீடன்), தவசீலன் (அதிபர்), சுகந்தினி (முன்னாள் ஆசிரியை – வவு/தமிழ் மத்திய மகா வித்தியாலயம், பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் […]

விஜய் ஆலோசனை; அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. இணையுமா?

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலை உள்ளது. தேர்தலுக்கு புது வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தால் தேர்தல் களம் ஆரம்பம் முதலே அனல் பறந்து வருகிறது. ஆளுங்கட்சியான தி.மு.க. 26 கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு வலுவாக தேர்தலை சந்திக்கிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும் தி.மு.க.வை எதிர்க்க இந்த படை போதாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் […]

டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என ஈரான் இதன்போது தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மிக விரைவில் […]

கரூர் விவகாரம் – செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூரில் நடந்த கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நேற்று (09) நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நேற்றைய விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. அவர் சிபிஐ சம்மனைப் பெறவோ அல்லது அதற்குப் பதிலளிக்கவோ மறுத்துவிட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் நடந்த […]

நெடுநாள் மீன்பிடி படகு சுற்றிவளைப்பு

இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் மூட்டைகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.