பிராம்ப்டன் நகர தீயணைப்புப்படை நல மேம்பாட்டுத்திட்டம்

ஒன்டாரியோ அரசாங்கத்தின் தீயணைப்பு மானியம் (Fire Protection Grant) மூலம் வழங்கப்பட்ட $230,230 முதலீட்டின் உதவியுடன், பிராம்ப்டன் நகரம் தீயணைப்பு வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த முதலீட்டை முன்னிறுத்துவதற்காக கிராஹம் மெக்ரெகர், மேயர் பேட்ரிக் ப்ரவுன் மற்றும் நகர சபை உறுப்பினர்களுடன் இணைந்தார். இந்த முதலீடு தீயிலிருந்து பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, பிராம்ப்டன் சமூகத்தையும் பாதுகாக்க உதவுகிறது என்பதோடு இந்த நிதி உதவியின் மூலம் பிராம்ப்டன் நகர தீயணைப்பு மற்றும் அவசர […]

ஒன்ராறியோ மருத்துவமனைகளுக்கு கட்டமைப்பு நிதிக் குறைபாடு?

ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது எட்டாவது பட்ஜெட்டை முன்வைக்கும் முன், மாகாணத்தின் மருத்துவமனைகள் விரைவில் ஒரு பில்லியன் டொலர் அளவிலான கட்டமைப்பு நிதிக் குறைபாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தனது அரசின் சுகாதாரப் பதிவை அவர் வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாக, “ஹால்வே ஹெல்த் கேர்” போன்ற பிரச்சினைகளை சமாளிக்க மாகாணத்தின் மருத்துவமனை அமைப்புக்கு போதுமான நிதி வழங்கப்படவில்லை என்ற விமர்சனங்களை ஒன்ராறியோ மாகாணத்தின் முதல்வர் தொடர்ந்து மறுத்து வருகிறார் என […]

மஹிந்தானந்த, நலின் பெர்னாண்டோ மேல்முறையீடு!

முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10) இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (10) இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது. நேற்று (09) இந்த வழக்கின் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேலதிக பரிசீலனைக்காக அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. தலைமை நீதியரசர் […]

இரத்மலானையில் போதைப்பொருளுடன் பெண் கைது

இரத்மலானை பகுதியில் 100 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார். கல்கிஸ்ஸை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு!

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணங்களை இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் லலித் சந்திரசிறி பெர்னாண்டோ, இதற்கு முன்னர் பலமுறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும், நாட்டின் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டார். இருப்பினும், இம்முறை […]

நாட்டின் சில பகுதிகளில் மின் தடை!

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்த பின்னர் நிறுவப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் போது முறையான நியமனக் கடிதங்களை வழங்காமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (09) மாலை 3.00 மணிக்குத் தொடங்கியது. […]

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய நெருக்கடி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருவதால், பண்டிகை காலம் வரை நாட்டில் எரிபொருள் விலை உயர்வை தாமதப்படுத்தப்படக்கூடாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கலந்துரையாடும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பின்னணியில் நாட்டில் எரிபொருள் விலைகள் உயரும் சூழ்நிலைக்குத் தயாராக அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சந்தையில் […]

ஐரோப்பா ஆயுத இறக்குமதியில் அதிக கவனம்?

முடிவில்லாத உக்ரைன் போரின் விளைவாக ஐரோப்பா ஆயுத இறக்குமதியில் அதிக கவனம் செலுத்தி வரும் அதேவேளையில், ஒரு வளர்ந்து வரும் ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகவும் (Arms Powerhouse) உருவெடுத்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-25), அதற்கு முந்தைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதில் சுமார் 48 சதவீத ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து […]

மணிலா சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பிரதமர் ஹரிணி அமரசூரிய!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் விசேட அழைப்பின் பேரில், சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நகருக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்றுமுன்தினம்(08.03.2026) நள்ளிரவு இலங்கையிலிருந்து புறப்பட்ட பிரதமர், நேற்று திங்கட்கிழமை காலை மணிலாவிலுள்ள நினோய் அக்வினோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமரை, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக்க தல்பஹேவா, பிலிப்பைன்ஸ் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் […]

மத்திய கிழக்கில் காயமடைந்த இலங்கையர்கள் நலமுடன் உள்ளார்கள்!

மத்திய கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த 4 இலங்கை பிரஜைகளும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் காயமடைந்த இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளிவிவகார பிரதி அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இந்தத் தகவல் வௌியிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் மூவருடன் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தொலைபேசி ஊடாக நேரடியாக உரையாடியுள்ளார். அவர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் […]