வெப்பமான காலநிலை குறித்து சிறுவர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரித்து வரும் வெப்பநிலையால் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிறுவர்களின் மென்மையான தோல் காரணமாக வெப்பப் படைகள் (Heat rashes), அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்று (Fungal infections) போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் நீர்ச்சத்து குறைவதால் தூக்கமின்மை, […]

நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல்: ஒருவர் வெட்டிப் படுகொலை

யாழ்ப்பாணம்- நயினாதீவில் இரு பூசாரிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு வாள் வெட்டில் முடிந்ததில் ஒருவர் பலியானார். குறித்த சம்பவம் நேற்று(9.3.2026) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருகையில், நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருக்கும் நயினாதீவில் தொழில் நிமித்தம் சென்றிருந்த பூசகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தொழில் தகராறே குறித்த கொலையில் முடிந்ததாக தெரியவருகின்றது. இந்த சம்பவத்தில் நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகரது வாள் வெட்டிலேயே குறித்த பூசாரி பலியானார் என கூறப்படுகின்றது. சம்பவம் […]

மனித உரிமைகள் கண்காணிப்பகம் இஸ்ரேல் குறித்து கடும் கண்டனம்

லெபனானின் தெற்குப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய இராணுவம் சட்டவிரோதமாக ‘வெள்ளை பொஸ்பரஸ் ‘ (White Phosphorus) இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மார்ச் 3ஆம் திகதி, தெற்கு லெபனானில் உள்ள யஹ்மோர் (Yohmor) நகரில் உள்ள வீடுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஆய்வு செய்த […]

தேசிய சொத்துக்களை அரசாங்கம் பாதுகாக்கத் தவறிவிட்டது; இலங்கை மின்சார சபை குறித்து சஜித் பிரேமதாஸ

தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நேற்று (09.03.2026 ) விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்கள் முன்பாக அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அரசின் தற்போதைய நகர்வுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலுக்கு முன்பு மின்சார சபையின் 23 ஆயிரம் தொழிலாளர்களை வீதியில் இறக்கி, எக்காரணம் கொண்டும் மின்சார சபையைத் […]

அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்தது

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று இரவு (9) பெட்ரோல் மற்றும் டீசல் உட்பட அனைத்து எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. லங்கா ஒயிட் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூ.22, லங்கா சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூ.24, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ.24, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை ரூ.25 மற்றும் ஒரு லீட்டரின் மண்ணெண்ணெய் ரூ.13 என அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் நேற்று(9) நள்ளிரவு முதல் […]

ஈரானியக் கப்பலுக்கு அடைக்கலமளித்த இந்தியா

ஐக்கிய அமெரிக்க நீர்மூழ்கியொன்றால் டொர்பிடோ மூலம் தாக்கப்பட்ட மூன்று நாள்களுக்கு முன்னர் ஈரானிய போர்க்கப்பல் ஐரிஸ் டெனாவை துறைமுகத்துக்கு வர அனுமதியளித்திருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியத் துறைமுகங்களில் தரிக்க தமது மூன்று கப்பல்களுக்கு சனிக்கிழமை (28) ஈரான் அனுமதி கோரியதாகவும் ஞாயிற்றுக்கிழமை (01) அனுமதியளிக்கப்பட்டதாக இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்ஷங்கர் கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான தாக்குதல்களுக்கு சமனானவையே இப்போது உலக அரங்கில் நிகழ்த்தப்படுகின்றன

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், […]

யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்டவர்களை அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரோஹித்த அபேகுணவர்த்தன

ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அரசாங்கம் யாருடைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், சர்வதேச சட்டத்துக்கமைய அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார். ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்து உயிர்களை பாதுகாப்பதற்கு எடுத்த நடவடிக்கைக்கு அரசாங்கத்துக்கு எமது கெளரவத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அரசாங்கம் […]

இஸ்ரேலுக்கே எமது பூரண ஆதரவு; இலங்கை – அமெரிக்க ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துங்கள் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ எவ்வித தெளிவும் இல்லை எனவும் அவற்றை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (8) ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், தற்போதைய பூகோள அரசியல் சூழலில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காலுக்கும் எமது முழுமையான ஆதரவை வழங்குகிறோம். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது மோதல்கள் […]

தீர்வில்லையெனில் பணிப்புறக்கணிப்பு; மின்சாரசபை சேவையாளர் சங்கம்

மின்சாரசபையின் சேவையாளர்களின் தொழில் காப்புறுதியை உறுதிப்படுத்தாமல் அரசாங்கம் மறுசீரமைப்பினை செயற்படுத்தி மின்சார சபையை சவப்பெட்டிக்குள் தள்ளியுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்கள் குறித்து இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். தீர்வின்றேல் நிபந்தனையற்ற வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை மின்சார சபையின் சுதந்திர சேவையாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் பிரபாத் பிரியந்த தெரிவித்தார். இலங்கை மின்சாரசபை நேற்று திங்கட்கிழமை (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறுசீரமைக்கப்பட்டது. இலங்கை மின்சார சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக ஒன்றுகூடி […]