ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான தாக்குதல்களுக்கு சமனானவையே இப்போது உலக அரங்கில் நிகழ்த்தப்படுகின்றன

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார்.

சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள்.

உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள்.

2009-ல் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, அதன் சிதைவுகளையும் ஆவணங்களையும் உலகுக்கு வெளிப்படுத்தியதில் பெண்களின் துணிச்சல்மிக்க பங்களிப்பு மகத்தானது.

ஈரான் இன்று இஸ்ரேல் மீது கொத்துக்குண்டுகளை வீசுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ள சூழலில், அன்று 22 நாடுகளின் துணையோடு தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட அநீதியை உலகம் மறந்துவிடக்கூடாது.

குறிப்பாக, ஐநா சபையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை எனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்த ஈரானின் நிலைப்பாட்டையும், ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றிய அமெரிக்காவின் தமிழர்கள் மீதான சார்பு நிலைப்பாட்டையும் நாம் நினைவில் வைத்து இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் வாக்களிக்கும் உரிமை கூட இல்லாத ஒரு இருண்ட யுகத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் எங்களை மீண்டும் பின்னோக்கித் தள்ளினாலும், எமது பெண்கள் தாய், தாரம், பிள்ளை எனப் பல பரிமாணங்களில் சமூகத்தை வழிநடத்துகிறார்கள் என்றார்.

Sajith-Premadasa-2 (1)

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு சிங்கப்பூர் பாணி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ

June 25, 2026

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனைச் சட்டங்களை (Singapore-style punishments) அரசாங்கம்

6

உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!! – ஜெயக்குமார் விமர்சனம்

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்விற்காக வெறும் 26 காலிப்பணியிடங்களை மட்டும் அறிவித்திருப்பது, அரசுப்

default (37)

கனடா முன்பள்ளியில் சிறுவர்கள் மீது கொடூரம்: தலைமுடியை இழுத்து, கழிவறைக்குள் பூட்டி சித்திரவதை செய்த ஆசிரியை!

June 25, 2026

டொர்பே, கனடா (CBC News): கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தில் உள்ள ‘டொர்பே’ (Torbay) நகரின் ‘ஒய்.எம்.சி.ஏ’ (YMCA) முன்பள்ளியில் (Pre-kindergarten

728370208_1320477406895994_2924890339714314159_n

கனடா: சர்ரே மிரட்டிப் பணம் பறிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு விவகாரம்! இரு வெளிநாட்டுப் பிரஜைகள் மீது அதிரடியாகப் புதிய குற்றச்சாட்டுகள் பதிவு

June 25, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், மிரட்டிப் பணம் பறிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்

5

விஜய், உதயநிதி இரண்டு பேருடைய கருத்தும் தவறுதான் – சிபிஎம் சண்முகம்!

June 25, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

sivakantha

இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில் மலைய இளைஞன் சிவகாந்தன்

June 25, 2026

லங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியில், கம்பஹா, உடப்புஸ்ஸல்லாவ கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் சிவகாந்தன் இணைந்துகொண்டு, மலையக மண்ணுக்குப்

aya4

ஜூலையில் ஈரானின் மறைந்த உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச்சடங்கு!

June 25, 2026

ஈரானின் மறைந்த முன்னாள் உயர் தலைவர் அலி காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான்

ja

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு பூட்டு

June 25, 2026

மன்னார், பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்று, சுகாதார அதிகாரிகளின் திடீர் சோதனையைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை

prem

அரசாங்க திறைசேரியின் 2.5மில்லியன் டொலர் மோசடியின் பின்னணியில் அரச ஆதரவாளர்

June 25, 2026

அரசாங்க திறைசேரியில் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் டொலர், அரசாங்க ஆதரவாளர் ஒருவரின் அவுஸ்திரேலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக

5KALS5J5YRAPVFZYPRQXZWAHCI

கனடா: பிராம்ப்டனில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

June 25, 2026

கனடாவின் ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி

3

தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தமிழக அரசிற்கு திருமாவளவன் கோரிக்கை!

June 25, 2026

சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ குறித்து

2

அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வாங்கியது யார்? – அமைச்சர் செங்கோட்டையன் சவால்!

June 25, 2026

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்கு நிதி வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இதற்கான ஆதாரத்தை