100 ஆண்டுகளை நிறைவு செய்யும் இலங்கை பொருந்தோட்ட உரிமையாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சங்கம்

இலங்கையில் முதலில் நிறுவப்பட்ட நலன்புரி நிதிகளில் ஒன்றான இலங்கைத் பெருந்தோட்ட உரிமையாளர்களின் நலன்புரிச் சங்கம், 2026 மார்ச் 10ஆம் திகதியன்று தனது நூற்றாண்டு விழாவை மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. இச்சங்கம் உத்தியோகப்பூர்வமாக இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டியில் ஆரம்பிக்கப்பட்டது. தொழில் ரீதியாக தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட உரிமையாளர்களின் ஓய்வூதியத்தை பாதுகாப்பதே இந்நிதியின் நோக்கமாகும். தன்னார்வ ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாக 331 உறுப்பினர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியமானது, ஆண்டுக்காண்டு பலமாக வளர்ச்சியடைந்து இன்று 1700க்கும் மேற்பட்ட […]
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து தூதுவர்

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி Siri Walt, இன்று செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியைச் சந்தித்தார். இந்நாட்டின் தற்போதைய பொருளாதாரம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எழுந்துள்ள நிலைமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. இலங்கையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தை நிறுவியதிலிருந்து 70 ஆண்டுகளில், இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் பயிற்சியை மேம்படுத்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் போன்ற சமூக மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கு […]
அமெரிக்கா-தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி:வட கொரியா கடும் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்டு வரும் வருடாந்திர ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு வட கொரியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கிழக்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மையை இந்த இராணுவப் பயிற்சிகள் சீர்குலைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள வட கொரியத் தலைவர் கிம் ஜோ உன்னின் சகோதரியும், அந்,நாட்டின் முக்கிய அதிகாரியுமான கிம் யோ ஜோங், இது “எண்ணிப்பார்க்க முடியாத மோசமான விளைவுகளை” ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். சுமார் 18,000 அமெரிக்க மற்றும் தென்கொரிய […]
நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்படமாட்டாது
அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது. அஸ்வெசும உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கான முன்னாயத்தங்களுடன் இந்தத் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை குறைப்பதற்கோ அதிகரிக்கப்பட்ட அடிப்படை […]
சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக நெல்லியடி பொலிஸார் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேசத்தில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (09.03.2026) நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றப்படுவதாக நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரைக் கண்டதும், மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் சிறிய […]
கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான சிறிய குழுவொன்றினால் நேற்று (09.3.2026)கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளின் தேசியக் கொடிகளை ஏந்தியிருந்ததுடன், தற்போதைய போரில் அந்த நாடுகளின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கோஷங்களையும் எழுப்பினர். இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணத்தில் மாற்றம்?
மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளமையினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான பயணத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் வழியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் கூட்டுத்தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் வான்வெளி பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன. வான்வெளி மூடப்பட்டதன் விளைவாக மத்திய கிழக்கில் உள்ள நகரங்களுக்கு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.நேற்று ஏழு விமானங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டன. இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஐரோப்பிய இடங்களுக்கான விமான […]
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) அன்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்த 17 வயதுடைய அருள்பாயஸ் என்ற சிறுவனுக்கு நீதி கோரியே மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுவனின் உறவினர்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை […]
பிரதமர் கலாநிதி ஹரிணிக்கு சர்வதேச தலைமைத்துவ விருது

பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு “ஷிரீன் […]
சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலையில் பறக்கவிடப்பட்ட கறுப்புக்கொடி; விசாரணைகள் ஆரம்பம்!

சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் கருப்பு கொடி பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையை இன்று(10.03.2026) குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து தமிழர் தாயகத்தில் இந்த முறை போராட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் கறுப்புக்கொடி பறக்க விடப்பட்டிருந்தது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அண்மைய கூட்டத்தில் […]