இலங்கையில் வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த சர்வதேச நிபுணத்துவ மாநாடு!

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தோல் நோயியல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், இந்த சர்வதேச மாநாட்டின் தலைவருமான தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் நயனா மதரசிங்க, இந்த மாநாடு முழு உலகினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக அமையும் எனக் குறிப்பிட்டார். […]

பிரசாத் ரணசிங்க பிணையில் விடுதலை

விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (10) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பிலான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிமன்றம், தலா 10 இலட்சம் ரூபா […]

இலங்கையில் உள்ள தமது நாட்டவரின் சடலங்களைப் மீளப்பெற ஈரான் நடவடிக்கை

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான ‘ஐரிஸ் டெனா’ கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயிரிழந்த 104 கடற்படையினரில் 84 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்கள் விரைவில் ஈரானுக்கு கொண்டு வரப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சின் முயற்சி மற்றும் […]

கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வேலைநிறுத்தம் தொடரும் – மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள்

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்சார சபை கலைக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட நான்கு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பு குறித்து மின்சார தொழில்நுட்ப பொறியியலாளர் மற்றும் அதிகார சபையின் உப தலைவர் நந்தன உதயகுமார கருத்துத் தெரிவிக்கையில்: “மின்சார சபை கலைக்கப்பட்ட […]

விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

கொழும்பு – ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(09.03.2026) கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துவுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது, பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் கேகாலை […]

நாட்டில் நிலக்கரி ஊழலால் மின்சாரக் கட்டணமும் உயரும் அபாயம் – எஸ்.எம். மரிக்கார்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம் மக்களின் பணத்தை பகிரங்கமாக கொள்ளையடித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றஞ்சாட்டியுள்ளார். எதுல்கோட்டேயில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் 26 நாட்களுக்குத் தேவையான பெற்றோலும் 30 நாட்களுக்குத் தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதி சபையில் கூறியிருந்த […]

அரசு முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாதமையே இன்று நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குக் காரணம்!

45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்திரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் […]

2016 பின் அரச சேவையில் இணைந்த அனைவருக்கும் ஓய்வூதியம்!

2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்த அனைத்து அதிகாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். புதிய பல் சிகிச்சையுடன் தொடர்புடைய தொழிநுட்பம் சார்ந்த அதிகாரிகள் மற்றும் செயற்கை அவயவங்கள் தொடர்பான அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (9) சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிக்கையில், 2016 ஆம் ஆண்டின் பின்னர் அரச […]

திருச்சி முகாமில் ஈழத்தமிழர்; உண்ணாவிரதப் போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் கடந்த முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஈழத்தமிழரான யோகராசா நவநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமக்கு இதுவரை சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சென்னையில் உள்ள அதிகாரி ஒருவரிடம் நான் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நீதிமன்ற உத்தரவுடன் என்னை விடுதலை செய்யுங்கள். வெளியில் இருந்து வழக்கை நான் பார்க்கின்றேன் என்று தெரிவித்தேன். நான் ஓடிவிடுவேன் என்று என்னை அடைத்து […]

மூன்று பிள்ளைகளின் தந்தை தற்கொலை: இளவாலையில் சம்பவம்

யாழில், தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9.3.2026) இடம்பெற்றுள்ளது. டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், அவரது குடும்பத்தினர் நேற்றுமுன்தினம்(8) காங்கேசன்துறை பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வுக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட […]