தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணி, கைலாசப்பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பமாகி கோவில் வீதி ஊடாகச் சென்று சங்கிலியன் பூங்காவை வந்தடைந்தது.
பேரணியின் போது, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டுமென்ற கோரிக்கை பிரதானமாக முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.