குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாதாள உலகக் கும்பல்களுக்கிடையேயான மோதல்களின்போது கைக்குண்டுகளைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது இதன்போது தெரியவந்துள்ளது. இதனிடையே, தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் வீட்டு உரிமையாளரின் காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அந்தச் கால் அகற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது அண்மையில் அடையாளம் தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட […]
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக அண்மைக்காலமாக மேல் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள் கைக்குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். யுத்த காலத்தில் எல்.டி.டி.ஈ யிடமிருந்து பெறப்பட்ட கைக்குண்டுகளையே இவர்கள் இவ்வாறு பயன்படுத்துவதாக சந்தேகம் எழுந்துள்ளதுடன், அதற்கமைய எதிர்காலத்தில் குற்றங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளில் முப்படையினரையும் இணைத்துக்கொள்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் […]
காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைச் சுங்கத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை, அது தொடர்பான […]
தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர். வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா நிறுவனத்தினால், மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, குறித்த கடல் பகுதியில் மணல் திட்டில் சிக்கித் தவித்த நபர் ஒருவர் அவதானிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், அந்த நபர் தென்னிந்தியாவில் இருந்து படகு மூலம் வந்து இவ்வாறு வழிதவறி […]