மோடி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்? – சுப்ரமணியன் சுவாமி

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சமரசங்களுக்கு’ உள்ளானதாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவு இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.

தனது X பதிவில் இன்று செவ்வாய்க்கிழமை (10) அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்:

“மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்?” என அவர் வினவியுள்ளார்.

தனக்குத் தெரிந்த அமெரிக்க நண்பர்கள் மற்றும் வட்டாரங்கள் மூலம், வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி அமெரிக்காவிடம் அடிபணிந்து சமரசம் செய்து கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சமரசம் குறித்த உண்மையான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் முழுமையாகத் தெரியவந்தால், மோடி தனது பிரதமர் பதவியையே இராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சுவாமி எச்சரித்துள்ளார்.

ஏற்கெனவே இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒருவரே இப்படிப் பதிவிட்டது விவாதத்தை இன்னும் தீவிரமாக்கியுள்ளது.

2

அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வாங்கியது யார்? – அமைச்சர் செங்கோட்டையன் சவால்!

June 25, 2026

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்கு நிதி வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இதற்கான ஆதாரத்தை

1

மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ. 2.47 லட்சம் கோடி! – வெள்ளை அறிக்கை வெளியீடு!

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்

namal

கிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ் லங்கா’ (Krrish Lanka) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு,

protest11

சாவகச்சேரியில் நாளை முழு கடையடைப்புப் போராட்டம்!

June 25, 2026

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரின் (Gnanasundaram

Yoshitha-Rajapaksa (1)

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தில் ரோஹித ராஜபக்ஷ முன்னிலையானார்

June 25, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் காவற்துறையின் மத்திய குற்றவியல்

Ilangu

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோரின் பதவி பறிப்பு – இளங்குமரன் கண்டனம்

June 25, 2026

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கண்டனம்

namal raja

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை குறிவைத்து பேசுவது குறித்து அரசை நாமல் சாடல்

June 25, 2026

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை குறிவைத்து அரசு கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது எனவும், விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கத் தவறிய பின்னர் அவர்களையே

ANURA PARL

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் நீக்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர  அறிவிப்பு!

June 25, 2026

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் (2026) முழுமையாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

anura

ஊழல், போதைப்பொருள் மற்றும் அரசியல் பிணைப்பை ஒழிக்கப் போர்க்கால நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி உரை!

June 25, 2026

கொழும்பு ஊழல், திட்டமிட்ட பாதாள உலகக் குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையே நிலவும் இரகசியப்

ANURA PARL

கைதானவர்கள் குறித்த மேலும் பல திடுக்கிடும் விபரங்கள் இன்று வெளியாகும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

June 25, 2026

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூன் 25) கைது செய்யப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தொடர்பான மேலும் பல அதிர்ச்சியூட்டும்

PRISIONERS PRO

சிறைச்சாலைகளில் 184 மரணங்கள்: இலங்கைக்கு வந்துள்ள ஐநா குழுவிடம் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அதிர்ச்சி அறிக்கை

June 25, 2026

இலங்கைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் கைதிகளின் மரணங்கள், சிறைச்சாலைகளின் அதிகளவிலான நெருக்கடி நிலை, சித்திரவதைகள் மற்றும் தடுப்புக்காவல் கூடங்களின் மோசமான

ARMY OCCU LAND

வலிகாமம் வடக்கு: மக்களின் சொந்தக் காணியில் இராணுவப் பண்ணை பெயர்ப்பலகை! ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்க முயற்சி என மக்கள் கவலை

June 25, 2026

வலிகாமம் வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) அமைந்துள்ள, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியாரின் விவசாயக் காணிகளில் இலங்கை இராணுவம்