மீள் எழுச்சித் திறன் கொண்டதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவு

பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்தினுள் 2025 நவம்பர் 27ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் மற்றும் பீடாதிபதிகளைச் சந்திப்பதற்காகப் பல்கலைக்கழகத்திற்கு அவர் டிசம்பர் 07ஆம் திகதி விஜயம் செய்தபோதே இவ்வாறு தெரிவித்தார். இந்த விஜயமானது, கல்விசார் கட்டடங்கள், மாணவர் வசதிகள் மற்றும் பிரதான உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட […]

இலங்கைக்குள் நுழையும் மற்றுமொரு புயல்

வங்காள விரிகுடாவில் உருவான புயலொன்று இலங்கைக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 75 மிமீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வீடுகளில் வெடிப்பு: 30 குடும்பங்கள் வெளியேற்றம்

மொனராகலை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் சிரிகல மொனராகலை தோட்டத்தில் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக முப்பது குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து நேற்று திங்கட்கிழமை (08) அன்று வெளியேற்றப்பட்டனர். வீடுகளின் சுவர்கள் சாய்ந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அந்தக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக மொனராகலை பிரதேச செயலாளர் சதுரான சமரசேகர தெரிவித்தார். மொனராகலை மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. நிஷாந்தவும் இந்தப் பணியில் இணைந்து, மொனராகலை மயூரகிரி ஜூனியர் கல்லூரியில் நிறுவப்பட்ட பாதுகாப்பு மையத்தில் தற்போது தங்கியுள்ள […]

“டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோர் பதிவு ஆரம்பம்!

காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் […]

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு?

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றுக்(08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 1,421 ஹெக்டெயார் காய்கறி பயிற்செய்கைகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு […]

இளைஞர் ஒருவர் படுகொலை; சந்தேகநபர் கைது

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (08) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் காயமடைந்த குறித்த இளைஞர், பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பணத்தகராறு முற்றியமையினால் நபர் ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் துடெல்ல, கம்புருகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த […]

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற அம்பிட்டிய தேரருக்கு பிடியாணை!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார். கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வடக்கில் […]

அரசியல் அழுத்தம்; நிவாரணத்தை சரியாக செய்ய சிரமம்?

நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம் – கிராம உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் கிராம உத்தியோகத்தர்கள் சுயாதீனமாகச் செயல்படுவதைத் தடுத்தால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நிவாரணப் பணிகளை சுயாதீனமாக மேற்கொள்வதில் கிராம உத்தியோகத்தர்கள் மீது பல்வேறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்தார்.

மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளது. தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் குறித்த சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையின் அடிப்படையில், அந்தப் பகுதிகளில் வசிக்கும் […]

இன்றைய வானிலை

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் […]