‘அகண்டா 2’ படக்குழு போட்டுள்ள திட்டம்
போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘அகண்டா 2’. கடந்த வாரமே ரிலீசாகவிருந்த இப்படம் சில காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் பாலைய்யா ரசிகர்கள் கடும் அப்செட் அடைந்தனர். இதனையடுத்து ‘அகண்டா 2’ புதிய ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ இரண்டாம் பாகம் ரிலீசுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. கடைசி நேரத்தில் படத்துடைய வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது […]
மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கும் குருநாகல் மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மண்சரிவு அபாயம்; 311 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மஸ்கெலியா – மறே தோட்டத் தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08) மாலை இவர்கள் குறித்த தோட்டத்திலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மறே தோட்டப் பகுதியில் உள்ள மலையில் அமைந்துள்ள பாரிய கற்பாறையில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த பாறை […]
ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் ஆகாஷ், மாதுளன்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் விக்னேஸ்வரன் ஆகாஷ், வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாதுளன், ஆகிய இருவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 19 வயதுக்குட்பட்ட மேற்கிற்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் – செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடி 9.10 என்ற சராசரியுடனும் 3.26 […]
கட்டுநாயக்கவை வந்தடைந்தது ஐக்கிய அரபு அமீரக நிவாரண சேவை விமானம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 27 டொன் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் 8 பேர் உள்ள நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த விமானம் இலங்கையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் […]
இன்டர்நெஷனல் லீக் ரி20; பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 3ஆவது அரைச் சதம் சுப்பர் ஓவரினால் வீண்!
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இன்டர்நெஷனல் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியில் கல்வ் ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாடிவரும் பெத்தும் நிஸ்ஸன்க மூன்றாவது தொடர்ச்சியான அரைச் சதம் குவித்து வரலாறு படைத்துள்ளார். டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அவர் அரைச் சதம் குவித்த போதிலும் சுப்பர் ஓவர் முடிவினால் அது வீண் போனது. எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 81 ஓட்டங்களையும் துபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்கு […]
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு; 2,086 வீரர்களுக்கு பதவி உயர்வு
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும் மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்தும் இன்று (09) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனையிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவின் பரிந்துரைக்கமைய, 17 அதிகாரிகள் மற்றும் 2,069 சிரேஷ்ட, கனிஷ்ட மாலுமிகள் என மொத்தம் 2,086 கடற்படை வீரர்களுக்கு அடுத்த தரத்திற்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு
மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை சாதாரண மட்டத்தில் பேணுவதற்காக, இந்த வான் கதவு திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர். எதிர்வரும் நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள மழை எதிர்வுகூறல்களின் படி, தற்போது நாட்டின் பிரதான நீர்த்தேக்கங்கள் சிலவற்றில் உள்ள நீர் மட்டம் குறைக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய அநுராதபுரம் மாவட்டத்தின் நாச்சதூவ, இராஜாங்கனை, […]
ஜனாதிபதி தலைமையில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (08) காலை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி பின்வருமாறு தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில் 19,780 குடும்பங்களைச் சேர்ந்த 63,121 பேர் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் காரணமாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்ட முடிந்ததாக தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கும் திட்டத்தை […]
காலநிலை; முக்கிய அறிவிப்பு
அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (09) மாலை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில். 75 மி.மீட்டருக்கும் அதிகமான மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று […]