பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் கோரிக்கை
அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நிலவிய அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் நிவாரண வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அனர்த்த நிலைமையினால் பெருமளவான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், […]
தமிழ்நாட்டிலிருந்து 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்கள்
இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை எடுத்து வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் நேற்று திங்கட்கிழமை (08) திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பலை இறங்குதுறையில் வைத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார மற்றும் இலங்கைக்கான இந்தியாவின் யாழ். துணைத்தூதரக துணைத்தூதர் சாய் முரளி ஆகியோரும் வரவேற்றனர். அதன் பின்பு […]
இந்தோனேசியாவில் தீ விபத்து!
இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள ஒரு பேட்டரி தீப்பிடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து நாட்டின் பாதுகாப்புப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை
நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினை தொடர்ந்து ஹட்டன், கண்டி பிரதான வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை இரானுவம்,பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து பாரிய அர்ப்பணிப்புடன் செயப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல வீதிகளின் போக்குவரத்து வழமை நிலைக்கு திரும்பியுள்ள போதிலும், கடந்த 26 ம் திகதி தொடக்கம் ஹட்டன் – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாஹலகம கல்போக்குவ பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் முற்றாக […]
பேரிடர் பணிகளுக்காக செயற்படும் இந்தியாவின் நான்கு போர்க் கப்பல்கள்
இலங்கையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆதரிக்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, அவசர தேடல் மற்றும் மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளுக்கு கிட்டத்தட்ட 1,000 டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியைச் செய்கின்றன என்று இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றில் மூன்று கப்பல்கள் கொழும்பை அடைந்துவிட்டதாகவும், முக்கியமான மனிதாபிமானப் […]
மூடப்பட்ட பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி தீர்மானிப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, 9929 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இதற்கமைய, 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.12.16 முதல் 2025.12.22 வரை நடைபெறும் […]
கனடா பிராம்ப்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
கனடா பிராம்ப்டனில் ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பீல் பகுதிப் பொலிசார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை ஸ்டீல்ஸ் அவென்யூ நு அருகே உள்ள ஹ{ரோன்டாரியோ தெரு பார்ட்லி புல் பார்க்வே பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸ்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்று சுமார் 7 (மாலை) மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்ட போது துப்பாக்கியால் சுடப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கனேடிய காவல்துறை சமூக […]
மீண்டும் அறிமுகமாகிறது நிலையான தொலைபேசி
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட் கோட்சே என்பவர், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், லேண்ட் லைன் போனை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த போன், சமூக ஊடகங்கள் மற்றும் கவன சிதறல்களை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘பிசிக்கல் போன்ஸ்’ என அழைக்கப்படும் இந்த சாதனத்தில், ‘வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், பேஸ்டைம்’ போன்ற செயலிகளின் இணைய அடிப்படையிலான அழைப்புகளை பெற முடியும். இது குறித்து, கேட் கோட்சே […]
உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய செய்திகள்
நடப்பாண்டில், உலகம் முழுதும் மக்கள் அதிகம் தேடிய, 10 செய்திகளின் பட்டியலை, பிரபல தேடுபொறி நிறுவனமான, ‘கூகுள்’ வெளியிட்டுள்ளது. அதன் தொகுப்பு: 1. சார்லி கிர்க் கொலை டொனால்டு டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், கடந்த செப்டம்பரில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள பல்கலையில் நடந்த நிகழ்ச்சி யில் உரையாற்றிய அவரை, டைலர் ஜேம்ஸ் என்ற இளைஞர் சுட்டுக் கொன்றார். 2.இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த ஜூனில், ‘ரைசிங் […]
‘நெட்பிளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ இணைப்புக்கு எச்சரிக்கை!
‘நெட்ப்ளிக்ஸ் – வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனங்கள் இணைந்தால், அது ஓ.டி.டி., சந்தையில் பிரச்னையை ஏற்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். உலகளவில் ஓ.டி.டி., எனப்படும், ‘ஆன்லைன்’ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் தளங்களில், ‘நெட்பிளிக்ஸ்’ முன்னிலை வகிக்கிறது. இதேபோன்று, ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனம், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவானாக உள்ளது. இந்நிலையில், ‘வார்னர் பிரதர்ஸ்’ நிறுவனத்தை, 9.72 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க, ‘நெட்பிளிக்ஸ்’ ஒப்பந்தம் போட்டுள்ளது. அந்நிறுவனத்தின் திரைப்படங்கள், ‘சூப்பர்மேன், […]