இன்டர்நெஷனல் லீக் ரி20; பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 3ஆவது அரைச் சதம் சுப்பர் ஓவரினால் வீண்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இன்டர்நெஷனல் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியில் கல்வ் ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாடிவரும் பெத்தும் நிஸ்ஸன்க மூன்றாவது தொடர்ச்சியான அரைச் சதம் குவித்து வரலாறு படைத்துள்ளார்.

டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அவர் அரைச் சதம் குவித்த போதிலும் சுப்பர் ஓவர் முடிவினால் அது வீண் போனது.

எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 81 ஓட்டங்களையும் துபாய் கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ஓட்டங்களையும் பெற்று இரண்டு போட்டிகளிலும் கல்வ் ஜயன்ட்ஸ் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்ட நாயகன் விருதுகளை வென்றிருந்தார்.

தொடர்ந்து நேற்று நடைபெற்ற போட்டியில் தொடர்ச்சியான 3ஆவது அரைச் சதத்தைக் குவித்த இன்டர்நெஷனல் லீக் ரி20 கிரிக்கெட்டில் அபூர்வ சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

எவ்வாறாயினும், சமநிலையில் முடிவடைந்த அப் போட்டியில் அவரது அணி சுப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்வ் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

பெத்தும் நிஸ்ஸன்க 29 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 56 ஓட்டங்களைப் பெற்றார். ரஹ்மானுல்லா குர்பாஸ் 41 ஓட்டங்களையும் ஜேம்ஸ் வின்ஸ் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் குசய்மா தன்வீர் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நூர் அஹ்மத் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெசர்ட் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்று போட்டியை சமநிலையில் முடித்தது.

 

டேன் லோரன்ஸ் 56 ஓட்டங்களையும் அணித் தலைவர் சாம் கரன் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நுவன் துஷார 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் அமுல்படுத்தப்பட்டது.

நுவன் துஷாரவின் சுப்பர் ஓவரில் டெசர்ட் வைப்பர்ஸ் ஒரு விக்கெட்டை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்றது.

டேன் லோரன்ஸ் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

நசீம் ஷாவின் சுப்பர் ஓவரில் கல்வ் ஜயன்ட்ஸ் 9 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

ஆட்டநாயகன்: டேன் லோரன்ஸ்

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது