வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து அவருடைய டைரக்ஷனில் புதிய படம் ஒன்றில் எஸ்கே நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எஸ்கே, வெங்கட் பிரபு காம்போவில் உருவாகும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. இதனிடையில் தன்னுடைய அடுத்த படத்துக்கான பணிகளை துவங்கியுள்ளார் எஸ்கே. வெங்கட் பிரபு டைரக்ஷனில் அவருடைய அடுத்தப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் காம்போவில் உருவாகும் படம் பற்றி புதிய புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்து வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்துக்காக அவருடன் இணைந்து அமெரிக்காவிற்கு சென்றார் சிவகார்த்திகேயன். லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் இருவரும் சென்றார்கள். இங்குதான் விஜய்யின் ‘கோட்’ படத்துக்காகவும் வெங்கட் பிரபு சென்றார். இங்கு உடல் மற்றும் முகம் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டும். ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் இளமையான தோற்றத்துகாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தற்போது எஸ்கே படத்தையும் இந்த முறையில் உருவாக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் சிவகார்த்திகேயன் கிளீன் ஷேவ், மீசை இல்லாத லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு படத்தில் இந்த தோற்றத்தில் தான் எஸ்கே நடிக்கவிருக்கிறாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவருடைய இந்த லேட்டஸ்ட் லுக் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

பராசக்தி படத்துக்கு பின்பாக எஸ்கேவின் லைன்அப்பில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இருந்தனர். இவர்கள் இருவருமே எஸ்கேவின் கால்ஷீட்டுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘டான்’ இயக்குனர் சிபி சக்கரவர்த்தியின் படம் தள்ளிப்போவதால், அவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கேற்றவாறு இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது. விஜய்யின் ‘கோட்’ கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தனது அடுத்த படத்துக்காக எஸ்கேவுடன் கூட்டணி அமைத்துள்ளார் வெங்கட் பிரபு. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சயின்ஸ் பிக்சன் கலந்த டைம் டிராவல் படமாக ‘எஸ்கே 26’ உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

acc 12

ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நிகழ்ந்த வாகன மோதலில் ஒருவர் பலி, குழந்தை கவலைக்கிடமான நிலையில் அனுமதி

May 30, 2026

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை விமானம் (Airlifted) மூலம் ‘சியோ’ (CHEO) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிபிசி நியூஸ்

default (29)

பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது: சர்வதேச தீர்ப்பாயம்

May 30, 2026

னடா அரசாங்கம் ‘பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உத்தியை நிலைநிறுத்தியுள்ளது’ என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஹோலி கப்ரேரா ·

w-412,h-232,imgid-01j20fp4ps4b0d77k9mwf2r578,imgname-free-bus-pass-1

“சீருடை இருந்தால் போதும்; காசு தேவையில்லை!” – ஜூன் 4-ல் பள்ளி திறப்பையொட்டி அரசு பஸ்களில் இலவசப் பயணத்திற்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி உத்தரவு!

May 30, 2026

சென்னை: “ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் எவ்விதக் கட்டணமும்

Madras-High-Court

“அமைச்சர்களுக்காகக் கடவுள் காத்திருக்க வேண்டாம்!” – திருப்பரங்குன்றம் நடை திறப்பு விவகாரத்தில் தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் உக்கிர அறிவுறுத்தல்!

May 30, 2026

சென்னை: “மாநிலத்தில் உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற விஐபி-க்களுக்காகக் கோவில்களில் கடவுள் ஒருபோதும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை”

screenshot-2026-05-29t121805-486-down-1780037569

“துடுப்பு இல்லாத படகு போல அல்லாடுகிறது அதிமுக!” – எடப்பாடி பழனிசாமிக்கு விலகல் கடிதம் அனுப்பி மேனாள் எம்பி இளவரசன் அசுர வேக அதிரடி!

May 30, 2026

சென்னை: “புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் காலம் காலமாக உண்மையாக உழைத்த விசுவாசத் தொண்டர்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை;

ctr-nirmal-kumar (1)

“இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல்; நிரந்தர விடுதலைக்கு அசுர வேக மூவ்!” – போக்சோ குற்றவாளிகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் உக்கிர எச்சரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் நீண்ட காலமாக வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியச் சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கப் போர்க்கால அடிப்படையில் அதிரடி

dailythanthi_2026-05-30_kipuhmob_15

“10 மாதங்களுக்குப் பின் பாய்ந்த ஆக்ஷன்!” – கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் அதிரடி கைது; தவெக அரசுக்குத் திருமாவளவன் மாஸ் பாராட்டு!

May 30, 2026

சென்னை: “நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி சுர்ஜித்தின் தாயாரும்,

vikatan_2026-02-16_hc251k86_6369f12560b16

“தவறு செய்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!” – காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அசுர வேக முறைகேடு புகார்; சொந்தக் கட்சி மீதே ஜோதிமணி எம்பி அதிரடிப் போர்க்கொடி!

May 30, 2026

சென்னை: “நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகப் பெரிய

1200-675-26777881-thumbnail-16x9-admk (1)

“அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!” – குதிரை பேர விமரிசனத்தோடு அதிருப்தியாளர்களுக்கு அசுர வேக எச்சரிக்கை விடுத்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

May 30, 2026

திருவண்ணாமலை: “கோடிக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் பேரியக்கமான அதிமுக-வை யாராலும் வீழ்த்தவும் முடியாது, அழிக்கவும் முடியாது; பதவி ஆசைக்காகவும்

vikatan_2025-01-16_dgwd8njw_Untitled-11

“ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக!” – ஆளுநர் மசோதா விவகாரத்தில் தவெக அரசுக்கு சிபிஎம் அசுர வேக நெத்தியடி கோரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைத் தார்மீக ரீதியாக நிலைநாட்டும் வகையில், முந்தைய ஆட்சியில் உச்ச நீதிமன்றம் வரை போராடிப் பெறப்பட்ட

25-67f763c02fb13

“16 நாட்களாகியும் 717 கடைகளும் மூடப்படவில்லை!” – முதலமைச்சர் விஜய்யின் மதுக்கடை காலக்கெடு குறித்து அன்புமணி ராமதாஸ் அசுர வேகக் கேள்வி!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூட வேண்டும்

canada acc

டொராண்டோ மேற்குப் பகுதியில் நள்ளிரவு விபத்து: பெண் அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

May 30, 2026

சனிக்கிழமை அதிகாலை டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வாகனம் மோதியதில் காயமடைந்த பெண் ஒருவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.