எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மின் கட்டணங்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து அவர் இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் அழைக்கப்படும் நிலக்கரி டெண்டரை நான்கு மாதங்கள் தாமதப்படுத்தியுள்ளது. தகுதிகளைத் தளர்த்தி நட்பு நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
42 நாள் டெண்டர் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டு செயற்கையான அவசரம் உருவாக்கப்பட்டாலும், டெண்டரை இரண்டு மாதங்கள் வழங்குவதில் எந்த அவசரமும் இல்லை என்பது தெளிவாகிறது. இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.