நிதி அமைச்சில் இடம்பெற்ற 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சைபர் கொள்ளை (Cyber Theft) சம்பவம் தொடர்பாக இதுவரை 21 நபர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார்.
திறைசேரியின் (Treasury) 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றியமை குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் யாராவது கண்டறியப்பட்டால், அவர்கள் தரம் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டா