1983 கறுப்பு ஜீலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்-பொ.ஐங்கரநேசன்

ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றுப் பேரவலத்தில் ஒன்றான கறுப்பு ஜீலை இன *க் *கலவரம் அரங்கேறி 43 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில் 1983 ஜீலையில் படு* கொலை செய்யப்பட்ட எமது உறவுகளின் நினைவாக ஒரு முறையான நினைவுச்சின்னம் அமைக்கப்படாமல் இருப்பது பெரும் வரலாற்றுத் தவறு ஆகும். இது இறந்த காலத்தை நினைத்து அழுவதற்கானது அல்ல;இது ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்காலப் போராட்டத்தின் ஒரு வடிவமும் ஆகும். அந்த வகையில் 2027 ஜீலைக்கு முன்னதாகவாவது 1983 இன*க்*கலவரத்தில் படு* கொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களையும் நினைவுகூரும் வகையில் பொது நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும் .
1983 ஜீலையில் நிகழ்ந்தது இரு சமூகங்களுக்கிடையே வெடித்த ஒரு சாதாரண கலவரம் அல்ல. அது, அப்போதைய பேரினவாத அரசாங்கத்தின் முழுமையான ஆசீர்வாதத்தோடும், அனுசரணையோடும் அரச இயந்திரங்களையும், வாக்காளர் பட்டியல்களையும் பயன்படுத்தித் தமிழ் மக்களை இனங்கண்டு மிகத் துல்லியமாக நடாத்தப்பட்ட திட்டமிடப்பட்ட ஓர் இன*ப்*படுகொலை ஆகும். கொழும்பில் ஆரம்பித்துத் தென் இலங்கையின் பிறபகுதிகளுக்கும் மலையகத்துக்கும் பரவிய பேரினவாத வெறியாட்டத்தில் வெலிக்கடைச் சிறையில் கைதிகளாக இருந்த 53 பேர் உட்பட 3000 தமிழர்கள் வரையில் படு*கொ லை செய்யப்பட்டார்கள்.
ஜீலை இன* க் *கலவரம் தமிழ் மக்களின் உயிர்களை மாத்திரம் பலியெடுக்கவில்லை. அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் திட்டமிட்டுத் தீக்கிரையாக்கப்பட்டன. ஈழத்தமிழர்கள் பொருளாதார ரீதியாகத் தற்சார்பு அடைந்து விடக்கூடாது என்பதற்காகத் தமிழர்களின் பல தசாப்தகாலப் பொருளாதாரக் கட்டமைப்புகள் ஒரே வாரத்துக்குள் முற்றாகச் சிதைக்கப்பட்டன. தமிழ் மக்கள் வெறும் கையினர்களாக அங்கிருந்து கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இந்த வரலாற்றுத் துயரங்களை மறப்போம் மன்னிப்போம் என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்ல முடியாது.
எமது நெஞ்சில் ஆறாத வடுவாக இருக்கும் இந்த வரலாற்றுப் பேரவலத்தின் பின்னணியையும், அதன் மூலம் தமிழ் இனம் கற்றுக்கொண்ட அரசியல் பாடங்களையும் எமது அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்துவது முதன்மையான தேசியக் கடமையாகும். இந்த வரலாற்றுக் கடத்துகைக்கு நினைவேந்தல்களும், நினைவுச் சின்னங்களும் அவசியமானவை ஆகும். எனவே, கறுப்பு ஜீலையில் எமது இனம் இழந்த உயிர்களின் சாட்சியாகவும், எமது தேசிய விடுதலைப் பயணத்தின் வழிகாட்டியாகவும் பொருத்தமானதொரு இடத்தில் 1983 கறுப்பு ஜீலை நினைவுச்சின்னம் நிறுவப்படல் வேண்டும்
gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்