சென்னை:
இந்தியாவின் பணப்புழக்கத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றிய ‘யு.பி.ஐ.’ (UPI) பண பரிவர்த்தனை, கடந்த 10 ஆண்டுகளில் யாரும் ஊகிக்க முடியாத அளவிற்குக் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டியுள்ளது. 2016-17 ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்ட இந்த சேவை, 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 314 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளைக் கண்டுள்ளது. இது தொடக்க காலத்துடன் ஒப்பிடுகையில் 3,140 மடங்கு அதிகமாகும்.
கடந்த நிதியாண்டில் மட்டும் மொத்தம் 24,162 கோடி முறை பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அதாவது, ஒரு நாளில் சராசரியாக 60 கோடி முறை மக்கள் யு.பி.ஐ மூலம் பணத்தை அனுப்பியுள்ளனர். எளிய செல்போன் பயன்பாடு, இணைய வசதி மற்றும் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாதது போன்ற காரணங்களால், சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை யு.பி.ஐ இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வரும் 2026-27 ஆம் நிதியாண்டில் இதன் மதிப்பு 368 லட்சம் கோடி ரூபாயை எட்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் வசதி இல்லாத கிராமப்புற மக்களும் வங்கிச் சேவையை எளிதாகப் பெற வேண்டும் என்ற நோக்கம் இதன் மூலம் முழுமையாகச் சாத்தியமாகியுள்ளது.
#UPI #DigitalIndia #DigitalPayment #EconomyNews #FinancialRevolution #UPITransactions #CashlessIndia #TechNews #BankingSector #IndiaGrowth #BreakingNews #May3 #Fintech #SmartIndia #Economy2026 #DailyTransactions #RBI #DigitalEconomy #IndiaForward #GrowthStatistics_