வெருகலில் நிவாரணங்களை வழங்குமுhறும் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறும் மக்கள் போராட்டம்

திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு நிவாரணங்களை வழங்க கோரியும் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்யுமாறு கோரியும் மக்கள் நேற்று (13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீரற்ற காலநிலை காரணமாகவும் மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததாலும் பல சேதங்கள் ஏற்பட்டன.

இதனால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணங்களை அலுவலகத்தில் பூட்டி வைக்காது பகிருமாறும் கோரி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த வெருகல் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பிரதான நுழைவாயிலை மறித்து போராடினர்.

பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வெருகல் பிரதேச செயலக வளாகம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் கொடுப்பனவுகளை வழங்குமாறும் குரல் எழுப்பிய மக்கள் பிரதேச செயலாளரை வெளிதே விடாது தடுத்தனர்.

இதன் பின்னர் குறித்த இடத்திற்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் W.G.m.ஹேமந்தகுமார வருகைதந்து பொதுமக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், அரச உத்தியோகத்தர்கள் வெள்ள நிலைமை ஏற்பட்டதன் பின்னர் சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்களை தூங்குகின்றனர்.உங்களுக்காகவே சேவையாற்றுகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்த உதவிகள் சகல பிரதேச செயலகங்களுக்கும் இப்போதுதான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .அவர்கள் உங்களுக்கு பகிர்ந்து தருவார்கள் அதுவரையில் அமைதியாக இருங்கள் என்று கூறி பொதுமக்களை சமாதானப்படுத்த முற்பட்டார்.

இதன் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் அவ்விடத்தில் இருந்து வெளியேற முற்பட்டபோது வெருகல் பிரதேச செயலகத்தின் இரண்டு நுழைவாயில்களையும் பொதுமக்கள் மறித்து பிரதேச செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்யாது இவ்விடத்திலிருந்து வெளியேற முடியாது என தடுத்தனர்.

இந்த விடயத்தில் ஆராய்வதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அதேவேளை வெள்ளம் ஏற்பட்ட நாள் தொட்டு இன்று வரை வெருகல் பிரதேச செயலாளர் மற்றும் அதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் வீடு செல்லாது மக்களுக்கு பணி செய்து வருவதாகவும் இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை கவலை அழிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் நாளை திங்கட்கிழமை(15) வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிய வருகிறது.

ரயிலில் யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

December 14, 2025

ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின்

சிரியாவில் அமெரிக்க வீரர்கள் படுகொலை!

December 14, 2025

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும்

ஓமன் வளைகுடாவில் எரிபொருளுடன் கடத்தப்பட்ட கப்பல் ஒன்றை கைப்பற்றிய ஈரான்!

December 14, 2025

கடத்தப்பட்ட எரிபொருட்களுடன், ஓமன் வளைகுடாவில் ஒரு எண்ணெய் கப்பலை ஈரான் கைப்பற்றியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது இந்தியா, இலங்கை

சீனாவின் செல்வாக்கு இந்தியப் பெருங்கடலில் விரிவடைகின்றது?

December 14, 2025

2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் ஒரு கொடிய சூறாவளியிலிருந்து இலங்கை மீண்டு வருவதால், கடல்சார் பாதுகாப்பு,

ஹமாஸின் முக்கிய தளபதி படுகொலை

December 14, 2025

காசா நகரில் ஒரு கார் மீது நடத்திய தாக்குதலின் போது ஹமாஸின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

December 14, 2025

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

கட்சியில் என்ன நடக்கிறது என்ற குழப்பத்தில் காங் தலைவர்கள்!

December 14, 2025

‘என்ன நடக்கிறது கட்சியில்…’ என, காங்., மூத்த தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். பீஹார் சட்டசபை தேர்தல் படுதோல்விக்கு பின், காங்கிரசின் நிலை

நிர்வாக தாமதங்களால் 88 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்கவில்லை?

December 14, 2025

மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும், 100 நாள் வேலை திட்டத்தில், மாநில அளவில் ஏற்படும் நிர்வாக

நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியம் – சஜித் பிரேமதாச

December 14, 2025

நாட்டின் அனர்த்த முகாமைத்துவ கொள்கையை புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். டித்வா புயலால்

உள்ளாட்சி தேர்தல்; கேரள அரசியலில் திருப்புமுனை – மோடி

December 14, 2025

கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 திகதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்

இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு

December 14, 2025

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

மெஸ்ஸியால் ரசிகர்கள் வன்முறை

December 14, 2025

ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு