சென்னை
தமிழக முதலமைச்சரும் தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அதிரடியாக வாபஸ் பெற்றுள்ளார்! லண்டனிலிருந்து காணொளி காட்சி (Video Conference) மூலம் ஆஜரான அவர், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனத் தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் வழக்கை முழுமையாக முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் காணொளி மூலம் ஆஜராக தரப்பினர் தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. கடந்த ஜூன் 15-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சில நடைமுறை கேள்விகளை எழுப்பியதுடன், இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப அறிவுறுத்தி வழக்கை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதலமைச்சர் விஜய்யால் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதேவேளையில், லண்டனில் இருந்து காணொளி வாயிலாக ஆஜரான சங்கீதா, தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாகத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அவரது இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் விவாகரத்து வழக்கை முடித்து வைத்தது. இந்தத் திடீர் திருப்பம் தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது!
#ThalapathyVijay #ChiefMinisterVijay #SangeethaVijay #VijayDivorceCase #ChengalpattuCourt #TamilNaduNews #Chennai #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNPolitics #KollywoodUpdates