‘ சமூக சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை செயல்படுத்தும் அதே வேளை அதனுடன் இணைந்ததாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளை விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சித் திட்டத் தொடரின் மற்றொரு கட்டம் நேற்று (18) மற்றும் இன்று (19) கிளிநொச்சியில் நடைபெறுகிறது.
வட மாகாணத்தில் பணியாற்றும் வட மாகாண சபைஅதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் அந்த மாவட்டங்களின் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சுமார் 45 அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் சமூக அபிவிருத்தி மன்றங்களை நிறுவுவதன் மூலம் இந்த திட்டம் அடிமட்டத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களின் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘சமூக சக்தி’ தேசிய திட்டத்தை செயல்படுத்தும்போது அரச அதிகாரிகள் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள், சமூக அபிவிருத்தி மன்றங்களை நிறுவுதல் மற்றும் சமூக வலுவூட்டலுக்காக அரச அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இதன் போது பரந்தளவில் தெளிவுபடுத்தப்பட்டது.
‘சமூக சக்தி’ செயலகம் மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 09 நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
By C.G.Prashanthan