வரலாறு காணாத வகையில் வெளிநாட்டவர் பிரிட்டனிலிருந்து வெளியேற்றம்!

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கியிருந்த வெளிநாட்டினர், வரலாறு காணாத வகையில் வெளியேறி வருகின்றனர். அதில், இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

வேலைக்காகவும், படிப்புக்காகவும் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் நாடுகளில் பிரிட்டன் முன்னணியில் உள்ளது. அதுவே அந்நாட்டிற்கு பிரச்னையாகவும் மாறியது.

39 சதவீதம் வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்ததால், உள்ளூர் மக்கள் சிரமப்படுவதாக பிரிட்டன் அரசு கூறியது. இதனால், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் அரசு கடுமையான விசா விதிகளை அறிமுகப்படுத்தியது. இதனால், பிரிட்டனின் நிகரக் குடியேற்றம் வெகுவாகக் குறைந்தது.

பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை மற்றும் அங்கிருந்து கிளம்பும் வெளிநாட்டினரின் எண்ணிக்கைக்கு இடையே இருக்கும் வித்தியாசமே நிகர குடியேற்றம் எனப்படுகிறது. இது தான் இப்போது சரிந்து வருகிறது.

அந்நாட்டு தேசிய புள்ளிவிபர அலுவலகத்தின் தகவலின்படி, 2023ல், 9.44 லட்சமாக இருந்த நிகர குடியேற்றம், 2025ல், 2.04 லட்சம் -ஆக குறைந்துள்ளது. இரு ஆண்டுகளில் ஏழு லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், பிரிட்டனை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர். மாணவர் விசாக்களில் இருந்த 45,000 பேர், பணி விசாக்களில் இருந்த 22,000 பேர் உட்பட, 75,000 பேர் வெளியேறியுள்ளனர்.

அடுத்தபடியாக, 42,000 சீனர்கள் வெளியேறியுள்ளனர். இதே போல், விசா வழங்குவதும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 32 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 31 லட்சமாக குறைந்துள்ளது. குறிப்பாக, பணி விசாக்கள் 39 சதவீதம் வரை சரிந்துள்ளது.

இதற்கு மத்தியிலும், 2025 ஜூன் வரையிலான காலத்தில், வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக 1.5 லட்சம் பேர் பிரிட்டன் சென்றுள்ளனர். குடியேற்றத்தில் ஐரோப்பா அல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.

வெளிநாட்டினரின் இருப்பு குறைந்தது பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அரசுக்கு பெரும் நிம்மதியாக அமைந்துள்ளது. ஆனால், திறன்வாய்ந்த உழைப்பாளர்கள் வெளியேறுவது, பிரிட்டனின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக