வத்திராயன் பகுதியில் செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மன வேதனை-செய்தி சேகரித்த ஊடகவியலாள ருக்கும் அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் கிராம அலுவலர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள்,

வெள்ளத்தால் நாங்கள் பாதிக்கப்பட்ட போதும் எங்களுக்கு எந்த விதமான கொடுப்பனவுகளும் தரப்படவில்லை.கேட்க நாதியற்றவர்களாக இருந்ததால் வேறு வழியின்றி ஊடகத்தை அழைத்துள்ளோம்.

டித்வா புயல் இலங்கையை தாக்கிக் கொண்டிருந்த சமயத்தில் எமது வீடுகளும் வெள்ளத்தால் நிரம்பி இருந்தது. உறவினர் வீட்டில் ஒரு சில குடும்பம் தங்கி இருந்தோம்.

எங்களுடைய வீடுகள் பலத்த காற்றால் சேதமடைந்த போதும் எமது வீட்டை கிராம அலுவலர் இதுவரை வந்து பார்க்கவில்லை.சேத விபரங்களை அறிக்கையிடவில்லை.நிரந்தர வீடு என்று கூறிச் சென்றார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அடிக்கடி கூறி வருகிறார் ஆனால் உண்மையில் பாதிப்படைந்த மக்களை அந்த நிவாரணம் போய் சேருவதை அரச அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்

பாதிக்கப்படாத மக்களுக்கு எமது பகுதியில் வெள்ள நிவாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது
ஆனால் உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களை யாரும் கவனிக்கவில்லை

கிராம அலுவலர் கூட இதுவரை பார்க்கவில்லை.காலில் காயமுற்று நடக்க முடியாதவர்களாக துன்பப்படுகின்றோம். அரசாங்கம் வழங்கும் நிவாரணத்தை வழங்க ஏன் அதிகாரிகள் தயங்குகின்றார்கள்

எந்த வீடாக இருந்தாலும் சரி புயலால் சேதமடைந்த வீட்டை வந்து கிராம அலுவலர் பார்வையிட வேண்டுமல்லவா? அதனையும் வந்து பார்வையிடவில்லை அஸ்வெசும போன்ற திட்டங்கள் மூலம் பலர் பயனடைந்து வருகிறார்கள் ஆனால் உண்மையில் வறுமைக்கோட்டில் கஷ்டப்படும் எங்களுக்கு எந்த விதமான திட்டங்களும் தரப்படவில்லை.வெள்ள நிவாரணம் கூட கிடைக்கவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அயலவர்களின் வீட்டில் குடியிருக்கும் எங்களை யாரும் வந்து நலம் விசாரிப்பதாக இல்லை.ஒரு சிலரின் தூண்டுதலில் நாங்கள் அடிக்கடி புறக்கணிக்கப்படுகின்றோம்.

ஒரு சில கிராமத் தலைவர்களும் அரச அதிகாரிகளும் பாரபட்சம் காட்டி பாதிக்கப்பட்ட மக்களை கைவிட்டு இருப்பது வேதனை அளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் போய் சேர்ந்ததா என்பதை ஆராய ஜனாதிபதி அவர்கள் சிறப்பு குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

காலா காலம் நாம் வீடு இன்றி தற்காலிக வீட்டில் துன்பப்பட்டு வருகிறோம் அரசாங்கம் கொடுக்கும் வெள்ள நிவாரணத்தை கூட அதிகாரிகள் கொடுப்பதற்கு மனம் இல்லாமல் இருக்கிறார்கள்

ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தி பதிக்கப்பட்ட எங்களுக்கு கொடுப்பவை பெற்றுத் தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

மக்களின் வேண்டுதலின் பேரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வத்திராயன் பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை