வடமராட்சியில் மிதுன்ராஜின் சாதனையைப் பாராட்டி மதிப்பளிப்பு

தெற்காசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்று பதக்கம் வென்று வரலாற்று சாதனை நிகழ்த்தி பெருமை சேர்த்துள்ள வடமராட்சியை சேர்ந்த மிதுன்ராஜின் சாதனையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று பருத்தித்துறையில் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா – ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கில் கடந்த 24.10.2025 ஆரம்பமாகி இடம்பெற்ற 4ஆவது தெற்காசிய மெய்வல்லுனர் சிரேஷ்ட சம்பியன்ஷிப் போட்டி தொடரில் இலங்கை சார்பில் பங்கேற்றிருந்த ஹாட்லி கல்லூரி மாணவனும் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக வீரருமான சுசீந்திர குமார் மிதுன்ராஜ் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.68 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

நீண்ட காலத்திற்கு பின்னர் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் சர்வதேச ரீதியில் இலங்கை சார்பில் பங்கேற்று பதக்கம் வென்றமை வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.

அந்த வகையில் தாயகம் திரும்பியுள்ள வடமராட்சி மண்ணின் மைந்தனான மிதுன்ராஜின் சாதனையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு பருத்தித்துறை வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில்  மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை சித்தி விநாயகர் (பெரிய பிள்ளையார்) ஆலயத்தில் காலை 10.00 மணியளவில் இறை வழிபாட்டை தொடர்ந்து சாதனை வீரனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து திறந்த வாகனத்தில் சாதனை வீரன் மிதுன்ராஜ் ஏற்றப்பட்டு மங்கல வாத்திய மரியாதையுடன் சூரிய மஹால் திருமண மண்டபம் வரை பிரதான வீதியூடாக அழைத்து செல்லப்பட்டு மதிப்பளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. வழி நெடுகிலும் வர்த்தகர்கள், பருத்தித்துறை முச்சக்கர வண்டி சேவை சங்கத்தினர்,பொது மக்கள் மிதுன்ராஜிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தது பாராட்டு தெரிவித்தனர்.

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தை சேர்ந்த அரவிந்தன் தலைமையில் சூரிய மஹால் மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் ஹாட்லி கல்லூரி முன்னாள் அதிபர் த.கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழகத்தினர், பருத்தித்துறை நகரசபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் சார்பில் அதன் தலைவர் கு.மகாலிங்கம் உள்ளிட்டோர் சாதனை வீரன் மிதுன்ராஜிற்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மதிப்பளித்தனர்.

மிதுன்ராஜின் பயிற்றுவிப்பாளர் வ.ஹரிகரன் மற்றும் நா.முகுந்தன் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலாளர் நடராசா திருலிங்கநாதன் பிரதம விருந்தினராக வும் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சிறப்பு விருந்தினர்களாகவும் யோகாசன ஆசான் ம.இரத்தினசோதி மற்றும் பருத்தித்துறை வர்த்தகர் சங்க பொருளாளர் ஆதித்தன் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் மா.முரளி, மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள்,பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக வீரர்கள், வர்த்தகர்கள்,பொதுமக்கள், மிதுன்ராஜின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை