ரயில் பயணச்சீட்டுகளை இணையவழி ஊடாக பெறும் வசதி

ரயில் பயணிகள் இணையவழி ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.pravesha.lk என்ற இணையதளத்தின் ஊடாக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ‘pravesha’ அலைபேசி செயலி (Mobile App) மூலமாகவும் ரயில் பயணச்சீட்டுகளைக் கொள்வனவு செய்யும் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பொது முகாமையாளரை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள பின்னணியிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்ட போதிலும், இன்று (17) வழக்கம்போல் ரயில்கள் இயங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ரயில் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தது.

இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், ரயில்வே ஊழியர்கள் சங்கம், இலங்கை பாதுகாப்பற்ற ரயில் காவலர்கள் ஒன்றியம், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளின் சங்கம் உட்பட 29 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல் ரயில் பொது முகாமையாளர் தன்னிச்சையாகச் செயற்படுவதால், அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியே இந்தப் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக இன்று காலை ரயில் பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என்றாலும், ரயில்கள் வழக்கம் போல் இயங்கியதாக பயணிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான பின்னணியில், தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை ஓரிரு நாள்களில் போய்ச் சேரும்; இதில் அரசியல் செய்ய வேண்டாம்!” – அமைச்சர் வன்னி அரசு உறுதி

September 18, 2026

விழுப்புரம்: மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுத் தினத்தையொட்டி திண்டிவனத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த

1200-675-27660976-thumbnail-16x9-mou

தமிழ்நாட்டில் கால்பதிக்கும் அமெரிக்காவின் ‘வால்கிரீன்ஸ்’: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

September 18, 2026

சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமான ‘வால்கிரீன்ஸ்’ (Walgreens), இந்தியாவில்

Edappadi-palanisamy-smile

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 6 நாள்கள் தீவிரப் பிரச்சாரம்!

September 18, 2026

சென்னை: அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“பஞ்சாபில் 16 மணி நேர மின்வெட்டு; தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு இல்லை!” – அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்

September 18, 2026

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப்

photo-collage.png (1)

மயில் தோகை விரிக்கும் இந்திய விமானப்படையின் ‘சாரங்’ சாகசக் குழு!

September 18, 2026

சாரங் (Sarang) என்பது இந்திய விமானப்படையின் (IAF) புகழ்பெற்ற வான்வழி சாகச ஹெலிகாப்டர் காட்சிக் குழுவாகும். உலகிலேயே ஐந்து ஹெலிகாப்டர்களைக்

sa

சவூதி அரேபியா – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல்

September 18, 2026

சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள்

cat

புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு

September 18, 2026

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு

anojan

அனோஜன் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பது என்ன?

September 18, 2026

சவுதிஅரேபியாவில் ஈழத்தமிழர் அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து

namal 22222222222

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் நாமல் கலந்துகொள்ளவேண்டியுள்ளது- பிணை மனுவில் வேண்டுகோள்

September 18, 2026

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றிலும் பௌத்தமத நிகழ்வொன்றிலும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவருக்கு பிணைவழங்கவேண்டும் என அவரது

Judment

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

September 18, 2026

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்

phototune.ai_1789733534

எனது மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் – அனோஜனின் தாயார் ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்

September 18, 2026

இஸ்லாமிய மதத்தை நிந்தித்து கருத்து பதிவு செய்தமைக்காக சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் தாயார் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க

Judment

மட்டக்குளி கோர விபத்து: காரின் சாரதிக்கு விளக்கமறியல்

September 18, 2026

மட்டக்குளி பகுதியில் பல வாகனங்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம்