சட்டவிரோதமாக வாகனங்களை பொருத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்புள்ளதா என்பது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினர் யோசித ராஜபக்சவிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செவ்வாய்கிழமை இரண்டு மணிநேரம் யோசித ராஜபக்ச இது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இலங்கை சுங்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள சட்டவிரோத இறக்குமதி,பொருத்துதல் மற்றும் சட்டவிரோத விற்பனை தொடர்பான விசாரணைகளின் ஒருபகுதியாகவே யோசித ராஜபக்ச இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
2020-21 ஆண்டு காலப்பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர ஜீப் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் சட்டபூர்வமான இறக்குமதிக்கான ஆவணங்கள் எவையும் இல்லையெனவும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.