யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை; 17 வருடங்களின் பின் தண்டனை முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று கூறப்படுபவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஜோன்சன் கொலின் வாலண்டினோ அல்லது ‘வசந்தன்’ தாக்கல் செய்த மேன்முறையீட்டை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்கள் யசந்த கோடகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை மீள பெற அனுமதிக்குமாறு கோரினார்.

2008, ஜனவரி 1, அன்று கொழும்பு பொன்னம்பலவனேஸ்வரர் சிவன் கோவிலுக்குள் மகேஸ்வரன் மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்போது, மகேஸ்வரனின் மெய்க்காப்பாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவரும் காயமடைந்தார்.

இதனையடுத்து மகேஸ்வரனும், குற்றம் சாட்டப்பட்டவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தன்னைச் சுட்ட நபர் என்று குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் இரத்தத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ சான்றுகள் அவரைக் குற்றத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.

இவை மறுக்க முடியாத உண்மைகள் என்று மனுதாரர் சட்டத்தரணி ஒப்புக்கொண்டார், எனவே, மனுவை மீள பெற நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

மனுதாரர் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தீர்ப்பை உறுதி செய்தது.

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக