யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகியிருந்த டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் கைது

க்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் இருவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 37 வயதுடைய சந்தேக நபர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

பதுளை – தெமோதரையைச் சேர்ந்த மனோஜ் அல்லது மனோஹரன் என அழைக்கப்படும் குறித்த சந்தேக நபர், முன்னதாக பொகவந்தலாவை பகுதியில் பொதுமக்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, அவர் கண்டி பல்லேகலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில், யாழ்ப்பாண பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி குமார்வேல் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் யாழ்ப்பாணத்தில் கடையொன்றுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் பதுளை ஹாலிஎல, வட்டவளை, விக்டன், டிக்கோயா, லிந்துலை, பொகவந்தலாவை, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடமாடியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தொடர்புடைய வழக்கிற்காக மீண்டும் அழைத்துச் செல்வதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

hu

Nvidia CEO வாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்?

November 23, 2026

என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியாகவும் (CEO), தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் ஜென்சன் ஹுவாங்கை (Jensen

image_cb09806546

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலிலிருந்து மூவர் நீக்கம்

November 23, 2026

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா

ind

வெலிங்டன் டெஸ்ட் போட்டி; இந்திய அணி 720 ரன்கள் குவித்து சாதனை

November 23, 2026

நியூஸிலாந்து – இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று

psls

நியூயோர்க் செனட் சபையில் கால்பதிக்கும் முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்

November 23, 2026

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச்

arrestt

தாயின் தாலிக்கொடியைத் திருடி காதலனுக்காக அடகு வைத்த யுவதி கைது!

November 23, 2026

மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர்

fsdf

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான காணி விடுவிப்பு

November 23, 2026

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான

IMG_2511

மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வு

November 23, 2026

உள்ளூர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நாடு

IMG_2510

ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்!

November 23, 2026

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான லோவி இன்ஸ்டிடியூட், ஆசியாவின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ‘2026 ஆசியா பவர் இண்டெக்ஸ்’

IMG_2509

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

November 23, 2026

அரச உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கும் நோக்குடன், 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,

IMG_2508

மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்

November 23, 2026

டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இலவச மூக்குக் கண்ணாடிகள்

8

“திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்ற தமிழக அரசு தயார்!” – தொல்.திருமாவளவன் பேட்டி!

November 23, 2026

மதுரை: திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தமிழக அரசு தயாராக உள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

IMG_2507

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

November 23, 2026

இலங்கையில் நெருங்கிய துணையினால் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்களில் சுமார் அரைவாசிப் பேர் (49.3%) எவ்வித முறையான உதவியையும் நாடவில்லை