யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் சக்தி வாய்ந்த பட்டாசினை கொளுத்திவிட்டு தூர சென்றபோது அது வெடிக்கவில்லை. அதன்பின்னர் அவர் அருகில் சென்று வாயினால் ஊதிய போது பட்டாசு வெடித்துள்ளது.
இதன்போது அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.