மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மொராக்கோவில் கடந்த 7 ஆண்டுகளாக மழையின் வறட்சி நிலவி வருகிறது. இந்த சூழலில், கடந்த சில தினங்களாக அந்நாட்டில் கனமழை மற்றும் அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில், அட்லாண்டிக் கடற்கரை மாகாணமான சபியில் பேய் மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மக்களின் வீடுகள் மற்றும் கடைகளை வெள்ளம் சூழ்ந்தன. வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில பகுதிகளில் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்ததாக மொராக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 30க்கும மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.