மே 26 முதல் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்

திர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என்பதால், அந்த நாட்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, கடந்த நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக அதிகரித்திருந்த பல பிரதான ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வந்தமையினால், கடந்த நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை பெய்திருந்தது. சில பகுதிகளில் 200 முதல் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்ததால், பிரதான ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. எனினும், நேற்று (23) பலத்த மழை பெய்யாததால் ஆறுகளின் நீர்மட்டம் தற்போது குறைவடைந்து வருகின்றது.

இதன்படி, களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் இன்று (24) முற்பகல் 9.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், களு கங்கையின் மில்லகந்தை பகுதியில் இன்னமும் சிறியளவிலான வெள்ள நிலைமை காணப்படுகிறது. களு கங்கையின் கிளையாறான குடா கங்கையின் மில்லகந்தை நீர்மானி இன்று முற்பகல் 8 மணிக்கு 6.51 மீற்றராகப் பதிவாகியிருந்தது. இதன் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அது இன்னமும் அனர்த்த மட்டத்திலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, ஹொரணை – பெல்லபிட்டிய பகுதியைச் சுற்றியுள்ள தாழ்நிலங்கள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், புளத்சிங்கள – களுத்துறை வீதி தீயகடுவ பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், களு கங்கையின் நீர்மட்டம் புட்டுபாவுல மற்றும் எல்லகாவ ஆகிய பகுதிகளில் இன்னமும் அவதானிக்கப்பட வேண்டிய மட்டத்திலேயே உள்ளது.

இதேவேளை, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் குறைவடைந்து வந்தாலும், துனுமலே சுற்றியுள்ள மக்கள் இன்னமும் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. அத்தனகலு ஓயா வான்பாய்ந்ததால் ஜா-எல, பாரிஸ் பெரேரா மாவத்தை மற்றும் சுதுவெல்ல ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட ‘டித்வா’ புயலினால் சேதமடைந்த பாரிஸ் பெரேரா மாவத்தையின் ஆரம்பப் பகுதியில் உள்ள கால்வாய் பக்கச்சுவர் இதுவரை புனரமைக்கப்படாததே இந்த வெள்ளத்திற்குக் காரணம் என பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறான பின்னணியில், ஜா-எல, ஸ்வர்ணஹங்ஸ பொடி எல பாலம் நேற்று (23) மாலை உடைந்து விழுந்துள்ளது. அத்துடன், ஜா-எலவிலிருந்து கம்பஹா நகரம் வரையான பிரதான பஸ் வீதி, யக்கடுவ பகுதியில் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலையினால் இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 491 குடும்பங்களைச் சேர்ந்த 1,731 பேர் 18 பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தினால் 836 வீடுகள் பகுதியளவிலும், 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

தற்போதைய வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கசுன் பெஸ்குவல் கருத்துத் தெரிவிக்கையில், “இன்றைய தினத்தைப் போன்றே நாளைய தினமும் சாதாரண வானிலையே நிலவும். எனினும், மே 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இலங்கையின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி சற்றே அதிகரிக்கக்கூடும். அந்த நாட்களில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை முழுமையாக நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

AMILQRQRUBGS5KNESEERTSLDYA

ரொறன்ரோவில் வர்த்தக நிறுவனமொன்றில் திடீர் மின் கசிவுத் தீ விபத்து; புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

May 25, 2026

னடாவின் ரொறன்ரோ நகரின் மேற்குப் பகுதியில் (Toronto’s west end) அமைந்துள்ள வர்த்தக நிறுவனமொன்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர்

OMLNFEEWGNDCXH67ATNFWCRMKI

கனடாவில் சோகம்: மாயமான புதுப்பிறந்த குழந்தையின் உடல் எச்சங்கள் மீட்பு; இருவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

May 25, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், மாயமாகியிருந்த புதுப்பிறந்த குழந்தையின்

shiran

பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

May 25, 2026

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக்

ol

ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

May 25, 2026

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற

namal

மாகாணசபைத் தேர்தலில் அரசு படுதோல்வியடைவது உறுதி – நாமல் ராஜபக்ஷ

May 25, 2026

காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த

4DVIZ2722NDEBD3DNDYNQF54NU

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் மொன்றியலுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளேன்வில் (Blainville) நகரில், வீட்டின் பின்புறத்திலுள்ள நீச்சல் தடாகத்தில்

orr

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்; ஒரிலியாவில் சந்தேகநபரைத் தேடும் மாகாணப் பொலிஸார்!

May 24, 2026

கனடாவின் ஒரிலியா (Orillia) நகரில் கடந்த வார இறுதியில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Antisemitic) பிரசுரங்கள் மற்றும்

XHW67JSV5FD5XMWEV4WAJKU5TU

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர் திடீர் மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனாபொலிஸ் கவுண்டியில் (Annapolis County) பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

NP7HUYGJH5EUXJTRR6VZRMQWZE (1)

ரொறன்ரோவில் 14 வயதுச் சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் பூர்த்தி; புதிய புகைப்படம் மற்றும் இணையதளத்தைப் பொலிஸார் வெளியீடு!

May 24, 2026

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இருந்து 14 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல்

CRO6W3PSD5E73DOWAAK7EKWSNU

ஸ்காபரோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து; மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

May 24, 2026

கனடாவின் ஸ்காபரோ பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர்

canada police261

குழந்தை மாயம்; ஹாலிஃபாக்ஸ் பொலிஸார் அவசரத் தேடுதல், நால்வர் கைது

May 24, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் மாயமாகியுள்ள புதுப்பிறந்த குழந்தை (Newborn baby) ஒன்றைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் விசேட தேடுதல் மற்றும் மீட்புக்

713dcd7a5667599efa224ad2e6e0c4bfd6cf556c5e061759081e4b1b4fc025fa

“பலவீனமான தவெக அரசு என்பதால் சிவகுமார் துள்ளுகிறார்!” – மேகதாது விவகாரத்தில் கே.என்.நேரு அதிரடி சாடல்!

May 24, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது, தங்களது காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எவ்வித எதிர்ப்பும்