சென்னை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வரும் சூழலில், இதனைத் தடுத்து நிறுத்தத் தமிழக வெற்றிக் கழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்!
இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கர்நாடக முதலமைச்சர் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜல்சக்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட நிதி உதவி மற்றும் விரைவான அனுமதி கோரியுள்ளார். கடந்த ஒரு மாதமாக கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதிரண்டு மேகதாது அணை விவகாரத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதற்காகத்தான் தமிழகத்திலும் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி மேகதாது அணை கட்டுவதைக் கடுமையாக எதிர்க்கும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், “தேர்தலின் போது விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு, தற்போது அரைகுறையாகத் தள்ளுபடி செய்தது ஏன்? குறுவை சாகுபடி பொய்த்துப்போய் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் உழவர்களுக்குத் தவெக அரசு உடனடியாக உரிய நிவாரண இழப்பீடு வழங்க வேண்டும். மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டித் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்” என ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார்!
#MekedatuIssue #UdhayanidhiStalin #ThalapathyVijay #TVKGovernment #DMKvsTVK #CauveryIssue #TamilNaduPolitics #TNPolitics #Chennai #FarmersIssue #KuruvaiCrop #AllPartyMeeting #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #PoliticalUpdatesTN