முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று (14) காலை வவுனியாவை சென்றடைந்தது.
யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை அடைந்தது.
இதன்போது, வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி செலுத்தியதுடன் அதனைத் தொடர்ந்து மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
அத்துடன் நகர வீதியின் ஊடாக சென்ற ஊர்தியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற வவுனியா மக்கள், உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.