முள்ளிவாய்க்காலில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஐ.நா வரை சென்றும் விடிவு கிடைக்காத இனமாக இருக்கிறோம்

மே 18 விண்ணை எட்டும் அளவுக்கு எமது மக்களின் அழுகுரல் இருந்தது. ஐ.நா வரை சென்றும் விடிவு கிடைக்காத இனமாக இருக்கிறோம். இறைவனுக்கும் அது தெரியவில்லை. இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயமான தீர்வு கோருகிறோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற அமர்வின்போது நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2025ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

முள்ளிவாய்க்கால் தொடர்பில் பலரும் பலவிதமாக கூறுகின்றனர். இங்கு நடந்தது உலக நாட்டில் எந்த மக்களுக்கும் வரக்கூடாத அவலமே அது. முள்ளிவாய்க்காலில் நாங்கள் பட்ட அவஸ்தைகளையே மே 18 பறைசாற்றுகிறது.

ஒரு குழந்தை இறந்த தாயின் மார்பில் பால் குடிப்பது முள்ளிவாய்க்கால் அவலத்தில் ஒரு அங்கமாகும். தகப்பன் குண்டு அடிப்பட்டிருக்கும் போது தாயும் பிள்ளையும் அவரை தூக்க முடியாது தாண்டி வருவது எந்தளவு அவலமாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தில் தம் கண் முன்னே இறந்தவர்களுக்கு இறுதிக்கிரியைக்கூட செய்ய முடியாமல் போனமை தொடர்பில் இன்னும் அவர்களின் உறவுகள் மனவேதனையில் வாழ்கிறார்கள்.

மே 18 விண்ணை எட்டுமளவுக்கு எமது மக்களின் அழுகுரல் இருந்தது. ஐ. நா வரையில் சென்றும் விடிவுக் கிடைக்காத இனமாக இருக்கிறோம். இறைவனுக்கும் அது தெரியவில்லை. இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயமான தீர்வையே கோருகிறோம்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ். பல்லைக்கழக வளாகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்ட போதும், இன்னும் வரையில் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏன் இந்த விடயத்தில் கவனம் இன்றி இருக்கின்றனர் என்று தெரியவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அத்துடன் கொன்னையன் குடியிருப்பு கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு தோட்டம் செய்பவர்கள் கோழி எச்சங்களை வெறுமனே தூவி விவசாயம் செய்கின்றனர். அங்கு இலையான்கள் சிறுவர்களிடையே தொற்று நோய்களை உட்படுத்துகின்றது. இதனால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை வன்னி மாவட்டம் கல்வியில் புறக்கணிக்கும் மாவட்டமாக காணப்படுகிறது. கணிதம், விஞ்ஞானத்திற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. இருந்தாலும் பாடசாலை அதிபர்கள் தமது திறமையால் வன்னி மாவட்டத்தை ஒரு நிலையில் வைத்திருக்கின்றனர். ஆனால் வன்னியில் கல்வி புறக்கணிக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்பதனை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.

Nada

யாழ்.பலாலி விமான நிலையத்தில் நடராஜர் சிலை பிரதிஷ்டை?

June 24, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ். கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

729481106_1021088533701986_4482724275745954913_n

விட்பி கடையில் கள்ள நோட்டுகள் புழக்கம்: சந்தேக நபரைத் தேடும் காவல்துறை

June 24, 2026

கனடாவின் விட்பி (Whitby) நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் கள்ள நோட்டுகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்கிய சந்தேக

730515905_1623541362526678_1589963721921684927_n

ஒஷாவா மருந்தகங்களில் போலி மருந்துச்சீட்டு மோசடி: மொன்றியலைச் சேர்ந்த இருவர் மீது குற்றம் சாட்டு

June 24, 2026

ஒஷாவா நகரில் உள்ள பல மருந்தகங்களில் (Pharmacies) போலி மருந்துச்சீட்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைப் பெற முயன்றதாகக் கூறப்படும் மோசடி விவகாரம்

Rajitha

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது மரபணு மாதிரிகள் சேகரிக்கப்ப்டவில்லை – சட்டத்தரணி ரனித்தா

June 24, 2026

மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின்

730451457_856458137519480_6962660640323909533_n

மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு: ஹாலிஃபாக்ஸ் நபருக்கு மாகாணம் தழுவிய பிடியாணை

June 24, 2026

மாகாணம் தழுவிய தற்காலிகப் பிடியாணை (Provincewide warrant) பிறப்பிக்கப்பட்டுள்ள 22 வயதுடைய ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக்

727788199_1687261052550087_6943194283308762826_n

பியர்சன் தங்கக் கொள்ளை விவகாரம்: துப்பாக்கிக் கடத்தல் வழக்கில் பிராம்ப்டன் நபருக்கு அமெரிக்காவில் 13 ஆண்டுகள் சிறை

June 24, 2026

டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் (Toronto Pearson Airport) பெரும் தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட

mull

யானை தாக்கி இளைஞன் உயிரிழப்பு; முல்லைத்தீவில் சம்பவம்

June 24, 2026

வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக

strike

அரசாங்கத்திற்கு எதிராக யாழில் வேலையற்ற பட்டத்தாரிகள் போராட்டம்?

June 24, 2026

வேலையற்ற பட்டதாரிகள் நாளை 25ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்

Dengue

14 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை

June 24, 2026

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர்

Sarana

முன்னாள் அமைச்சர் சிறைச்சாலை அலுவலகங்களை சுத்தம் செய்கிறார்!

June 24, 2026

வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை

Yoshitha

யோஷித ராஜபக்சவின் கல்வித் தகைமைகளில் முறைகேடு?

June 24, 2026

இலங்கை கடற்படையின் 45 ஆவது கடற்படை மாணவர் (Cadet) குழுவின் ஆட்சேர்ப்பிற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்றான க.பொ.த சாதாரண தரப்

WQO3J26HAREGNCDYTLLSB666GI-300x169-1

கனடாவில் கடமையின் போது காவல்துறை அதிகாரிகள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள்?

June 24, 2026

கடந்த இரண்டு வாரங்களுக்குள் கனடாவில் கடமையின் போது அதிகாரி ஒருவர் கொல்லப்படுவது இது மூன்றாவது முறையாகும். திங்கட்கிழமையன்று, மொன்றியலின் (Montreal)