முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோர் 2026 மே 12 ஆம் திகதி லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைக்குரிய ‘எயார்பஸ்’ (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பான தற்போதைய விசாரணைகள் நிமித்தம், வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்காகவே இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.