மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு
டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பை சீரமைக்கும் பணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) அன்றோ அல்லது அதற்குள்ளாகவோ நிறைவு செய்யப்பட்டு, அப்பகுதிகளுக்கு மீண்டும் மின்சார இணைப்பை வழங்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

டித்வா புயலின் தாக்கம் காரணமாக ரன்தெம்பே – மஹியங்கனை 132 கிலோ வோல்ட் மின் பரிமாற்ற அமைப்பின் ஒரு மின்கோபுரம் முழுமையாக அழிவடைந்ததுடன், மின் கம்பிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டது.

இந்தச் சேதத்தினால் மஹியங்கனைப் பகுதிக்கும், அத்துடன் நாட்டின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது.

இதன்போது இலங்கை மின்சார சபை (CEB) உடனடியாகச் செயற்பட்டு, 33 கிலோ வோல்ட் (kV) தற்காலிக இணைப்பு மூலம் அப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற அத்தியாவசிய இடங்களுக்கு மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்தது.

மேலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு சில மணி நேரங்கள் விட்டு விட்டு மின்சாரம் வழங்கும் முறையையும் CEB நடைமுறைப்படுத்தியது.

எவ்வாறாயினும், இந்தப் பணிகளைக் கண்காணிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் அப்பகுதிக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின்போது, மின் பரிமாற்றக் கோபுரம் முழுமையாக அழிந்து சேதமடைந்த போவதென்ன நீர்மின் நிலையத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

னேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக