யாழ்ப்பாணத்தில் நேற்று மின்சாரம் தாக்கி மாற்றுத்திறனாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவருக்குப் பிறப்பிலேயே கை, கால்கள் என்பன செயற்பாடுகள் அற்றுக் காணப்படுகின்றன.
தனது வாயினால் மின்சார ஆழியினுள் மின் இணைப்புக்காக வயரைச் செருக முற்படும்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.