மழையுடனான வானிலை; அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அனர்த்தங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு (10) இன்று இடம்பெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர,

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண் மேடுகள் இன்னும் அப்படியே காணப்படுவதாகவும், மண்சரிவு காரணமாக பெரிய மற்றும் நடுத்தர அளவிலான கற்கள் மேலெழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் மிகக் குறைந்த மழையின் போது கூட, அந்தக் கற்கள் மீண்டும் சரிந்து விழக்கூடிய அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.

முன்பு மண்சரிவு அபாயம் இருந்து தற்போது செயலிழந்துள்ள இடங்கள் கூட, இனிவரும் மழைவீழ்ச்சியுடன் மீண்டும் அபாய நிலையாக மாறக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதைக் கருத்திற்கொண்டு, முதலாம் கட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவு, மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர மற்றும் வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் ஆய்வியல் பிரிவின் பிரதம பொறியியலாளர் சாமர யாபா ஆராச்சி கருத்துத் தெரிவிக்கையில், வானிலை அவதானிப்பு நிலையத்தின் தகவல்களுக்கு அமைய ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் குறித்துத் திணைக்களம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வசமுள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களும், 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் வான்பாய்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய மழையினால் ஆறுகளின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ள போதிலும், அவை இன்னும் அபாயக் கட்டத்தை எட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கிரிந்தி ஓயா, வலவை, தெதுரு ஓயா, மல்வத்து ஓயா, களனி மற்றும் களு ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், அந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனர்த்த முகாமைத்துவ பிரிவானது 25 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருவதால், கடந்த 8-ஆம் திகதி அனைத்து மாவட்டப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இது குறித்துக் கூறுகையில், தற்போது சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, நீர்நிலைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மண்சரிவுக்கான அறிகுறிகள் குறித்து மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் அனர்த்த மேலாண்மைப் பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அல்லது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி