மலையகத் தமிழர்களின் காணி உரிமை; அரசின் தந்திரத்துக்குத் துணை போக வேண்டாம்: மனோ கணேசன்

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் அரசு பேசிப் பேசியே காலத்தைக் கடத்துவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதிய “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற புதிய சபையைக் கொண்டுவந்து, “காலநிலை, மண் சரிவு, நீர்பிடிப்பு” போன்ற சொற்களைச் சந்தைப்படுத்தி, ஒட்டுமொத்தப் பெருந்தோட்ட வாழ் மலையகத் தமிழர்களுக்கும் காணி உரிமையைத் தந்திரமாக மறுக்கவும், அவர்களை வேறு இடங்களில் குடியேற்றவும், தொடர்மாடிக் கட்டடங்களைக் கட்டிக்குடியேற்றவும் தற்போதைய அரசாங்கம் திட்டமிடுவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து இலங்கையில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேசப் பணிப்பாளர் ஷனென் கோவ்லின் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துத் தெளிவுபடுத்தியதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், மனோ கணேசனுடன் தமுகூ அரசியல் குழு உறுப்பினர்களான பேராசிரியர் விஜயசந்திரன், சட்டத்தரணி பாரத் அருள்சாமி, பொறியியலாளர் பிரஜீவன் ஆகியோரும், ஏடிபி சார்பில் பணிப்பாளர் ஷனென் கோவ்லின், தேசச் செயற்பாட்டுத் தலைவர் சொல்பொன் மம்பேடோவா உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினரும் கலந்துகொண்டனர்.

அங்கு ஏடிபி குழுவினரிடம் மனோ கணேசன் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கையின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில், மலையக மக்கள் வளர்ச்சி குன்றிய பிரிவினராவர். இதற்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன. எமது மக்களுக்கு 2003 ஆம் ஆண்டுதான் இறுதிக் தொகுதி குடியுரிமை கிடைத்தது. ஆகவே, எமது ஆரம்பப் புள்ளி தாமதமானது போலவே வளர்ச்சியும் தாமதமானது.
எமது குடியுரிமை முழுமையடைய வேண்டுமானால், எமது காணிக்கான உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். காணி உரிமை இல்லாவிட்டால் எமது குடியுரிமை முழுமையடையாது; அது கிடைத்தால் ஏனைய உரிமைகள் படிப்படியாக வந்து சேரும்.
அரசாங்கம் “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” என்ற புதிய யோசனையை முன்வைத்து, சட்டபூர்வமாக அதை உருவாக்க முனைகிறது. இதன் மூலம் மலைநாட்டு காலநிலை, மண் சரிவு, நீர்பிடிப்பு ஆகியவற்றுக்காக இதைச் செய்வதாகவும், அதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி செய்யப் போவதாகவும் கூறுகிறது.
மலைநாட்டின் நீர்வளங்கள், காடுகள், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் சூழலியல் அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்விட உரிமையும் காணி உரிமையும் பறிக்கப்படக்கூடாது.
மலையக மக்கள் பாரம்பரியமாகச் சில பெருந்தோட்ட மாவட்டங்களில் மட்டுமே வாழ்கின்றனர் என்ற தவறான அணுகுமுறையையும் அரசு கவனத்தில் கொள்ளவில்லை. உண்மையில், மலையக மக்கள் நுவரெலியா, கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களுடன் இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, மொனராகலை, கொழும்பு/அவிசாவளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் குருநாகல் உள்ளிட்ட கீழ்நாட்டு மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
அரசாங்கக் கட்சியான ஜே.வி.பி., மலையக மக்களின் காணி உரிமைக்கான கோரிக்கையைச் சித்தாந்த ரீதியாகப் பாரம்பரியமாக நிராகரித்து வந்ததுடன், அதற்குப் பதிலாகப் பெருந்தோட்டக் காணிகளை மீளக் காடாக்கும் (reforestation) கருத்தை முன்னிறுத்தி வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் பின்னணி இதுவா என்ற பலத்த சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.
நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் சில மலை உச்சிப் பகுதிகளும் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட பகுதிகளும் உயர் மலைநாடு (Highlands) என அடையாளப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கலாம். ஆனால், முழுப் பெருந்தோட்டப் பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட காணிகளாகக் கருதுவது மலையக மக்களின் நியாயமான காணி உரிமையை மறுக்கும் நிலைக்குக் கொண்டு செல்லக்கூடும்.
எமது தலையீடுகளின் விளைவாக, பெருந்தோட்டங்களில் வீடமைப்பதற்காக இந்திய அரசாங்கம் நிதியுதவி வழங்குவதற்கு இணங்கியுள்ளதுடன், நிதியும் தயாராக உள்ளது. ஆனால், காணி வழங்கப்படவில்லை. பெருந்தோட்ட நிறுவனங்களால் காணி விடுவிக்கப்படாததற்கு அடிப்படையான காரணம், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக அரசாங்கத்திடம் இன்னமும் தெளிவான கொள்கை இல்லாததே ஆகும்.
கீழ்நாட்டுப் பெருந்தோட்டங்களில் வாழும் மலையகக் குடும்பங்களுக்கு வீடமைப்பிற்கான காணித் துண்டுகளை உடனடியாக ஒதுக்குமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம். நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களின் மலை உச்சிப் பகுதிகளைத் தவிர்த்து, நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் பாதுகாப்பான இடங்களில் வீடமைப்பிற்கான காணிகளை வழங்குமாறு கோருகிறோம்.
பாதுகாப்பான குடியிருப்புகள் குறித்துப் பேசும் அரசு, மலைகளில் தொடர்மாடிகளைக் கட்டி எமது மக்களை அங்கே குடியமர்த்தப் போடும் திட்டங்களையும் நாம் நிராகரிக்கிறோம். சிறுபான்மைச் சமூகத்தின் காணி உரிமை மற்றும் வாழ்விட உரிமையை உதாசீனம் செய்யும் எந்தவொரு முயற்சிக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி துணை போய்விடக் கூடாது. உங்களது நல்லெண்ண உதவிகள் முறையற்ற முறையில் பயன்படுத்தப்பட இடமளிக்கக் கூடாது.
இது பற்றித் தெளிவுபடுத்துவதற்காகத் தமது குழுவினருடன் இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியையும், ஏனைய சர்வதேசப் பிரதிநிதிகளையும் மீண்டும் சந்திக்க உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எமது முன்வைப்புகளைச் செவிமடுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தேசப் பணிப்பாளர் ஷனென் கோவ்லின் தலைமையிலான குழுவினர், இந்த முக்கிய விவகாரங்களைத் தம்மைக் கவனத்திற்குக் கொண்டுவந்தமைக்காகத் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு நன்றி தெரிவித்தனர். சிறுபான்மை மக்களின் காணி மற்றும் கலாச்சார உரிமைகளை மறுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தமது நிறுவனம் ஒருபோதும் துணைபோகாது என்றும், இவற்றைத் தாம் அரசுடன் முன்னெடுக்கும் திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்

kal

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

October 9, 2026

களுத்துறை, நாகொட பகுதியில் உணவகம் ஒன்றில் இன்று (9) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில்

images - 2026-10-09T112650.899

“மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக தொடர்ந்து முன்னிலை!” – வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு

October 9, 2026

தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று

tvkmadhuranthagam-down-28521791085533

“மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் முடிவுகள் – 11 மணி நிலவரம்!” – தவெக வேட்பாளர்கள் முன்னிலை!

October 9, 2026

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக