ஈரானின்மறைந்தஅதிஉயர்தலைவர் அயதுல்லா அலி கமேனியை கௌரவிக்கும் வகையில், அவரது மறைவுக்குப் பின்னரான 40-ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (09) கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பில் உள்ள ஈரானிய கலாசார நிலையத்தில், ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அரசியல்வாதி விமல் வீரவங்ச உள்ளிட்ட பல இலங்கை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அயதுல்லா அலி கமேனி 1989 முதல் 2026-இல் அவர் படுகொலை செய்யப்படும் வரை ஈரானின் இரண்டாவது அதிஉயர் தலைவராகப் பணியாற்றினார்.