மருதங்கேணியில் பொலிஸ் – சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம்: சமூகச் சீர்கேடுகளைக் களைய அதிரடித் தீர்மானங்கள்

மருதங்கேணி பொலிஸ் காரியாலய மண்டபத்தில் இன்று (03.05.2026) பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக சமூகத்தில் இடம்பெற்று வரும் முக்கிய குற்றச் செயல்கள் மற்றும் அவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் உதவி அத்தியட்சகர் (ASP) மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ஆகியோர் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு
AI தொழில்நுட்பத் தவறுகளும் விழிப்புணர்வும்
வடமராட்சி கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைத் தடுக்க பாடசாலை ரீதியாக மாணவர்களுக்குப் போதிய சட்ட விழிப்புணர்வுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
மற்றும் கிராமங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக அழைத்து வரப்படும் நபர்கள் தொடர்பான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் தேசிய அடையாள அட்டைப் பிரதி மற்றும் முழுமையான விபரங்களை அந்தந்த பொலிஸ் நிலையங்களில் கட்டாயம் சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றும் சட்டவிரோத கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களைத் தராதரம் பார்க்காமல் கைது செய்து, உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
 மணற்காட்டு காடு பாதுகாப்பு
மணற்காட்டுச் சவுக்க மரத்தோப்பிற்குச் சட்டவிரோதமாகத் தீ மூட்டி, விறகு சேகரிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான இயற்கை வளச் சுரண்டல்களைத் தடுக்கவும், காட்டைப் பாதுகாக்கவும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு
18 வயதிற்குக் குறைந்த சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் போது, அக்குற்றத்தை மறைப்பவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஊக்குவிப்பவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதனைத் தடுக்க பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் இணைந்து கிராம மட்டத்தில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது
 கரையோரக் கண்காணிப்பு மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, கரையோரங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்பவர்களைத் தடுக்கக் கிராம சேவையாளர்களுடன் இணைந்து பொலிஸார் விசேட கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். கரையோரப் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதப் பயணங்களைத் தடுத்தல் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இறுதியாக சமூக அமைதியைப் பேணவும், குற்றமற்ற பிரதேசமாக மருதங்கேணியை மாற்றவும் பொதுமக்கள் மற்றும் சிவில் குழுக்கள் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க